பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1054

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

supranuclear

Surgical em...


supranuclear : உட்கருமேல் : 1. மண்டை நரம்புகள் அல்லது தண்டுவட நரம்புகளின் இயக்க நரம்பணுக்களின் தலைப்பக்க. 2. ஒரு உயிரணுவின் உட்கருவுக்கும் சேய்ம ஒரத்துக்கும் இடைப் பகுதி.

supraocclusion : பற்பொருத்துமேல்; பல்வரிசை : பொருத்து தளத்தையும் தாண்டி ஒரு பல்லின் நீண்டிருக்கும் நிலை.

supraorbital : கண் குழிமேல்; விழிக்குழிக்குமேல் : கண் குழிகளுக்கு மேலேயுள்ள.

suprarenal : சிறுநீர்ப்பைமேல்; அண்ணிரகம்; சிறுநீரகமேவி : சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள.

suprasternal : மார்பெலும்புமேல் : விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்புக்கு மேலுள்ள.

supraversion : மேல்திருப்பம் : 1. மேல்பக்கம் திருப்புதல், 2. பல்வரிசை பொருத்துக்கோட் டுக்கு வெளியேயுள்ள பல், 3. இருகண்காட்சி மேலே இணைப் பியக்கம்.

supression : அடக்கல்.

supressor : செயலொடுக்கி; வினை அடக்கி.

sura : கெண்டைக்கால்.

suraditos : பிறவிச் செவிடு.

suradity : கேட்புத்திறனில்லா.

sural : கெண்டைச் சதை : பின் காலின் கெண்டைச் சதைப் பகுதி.

suramin : சுரமின் : உறக்கசோய், யானைக்கால் நோய் ஆகியவற்றில் நரம்புவழிச் செலுத்தப்படும் மருந்து.

surge : மிகுபாய்தல் : ஒரளவு நிலையான அடிப்படை அளவுக்கு மேல் அதிகமாக ஒரு பொருள் பாய்தல்.

surgeon : அறுவை மருத்துவர் : அறுவை சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவம் பயில்பவர். நோய், காயம், அங்கக் குறை ஆகியவற்றை அறுவை மூலம் அல்லது கைகள் கொண்டு சிகிச்சை செய்பவர்.

surgery : அறுவை மருத்துவம்; அறுவை; அறுவையியல் : உறுப்புத் திரிபுகள், காயங்கள் ஆகியவற்றை அறுவை மருத்துவம் மூலம் குணப்படுத்தும் மருத்துவம்.

surgical : அறுவை மருத்துவம் சார் : அறுவை மருத்துவம் தொடர்பான.

surgical catgut : அறுவைக் குடலியல்.

surgical emphysema : அறுவைக் காற்றடைவு; அறுவைக்