பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1055

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

surgical ligature

1054

Suture


காற்றுத் திணிவு : அறுவை மருத்துவ மயக்கம் அல்லது காயத்தினைத் தொடர்ந்து தோலடித் திசுக்களில் காற்று நிரம்புதல்.

surgical ligature : அறுவை முடிச்சு.

surgical operation : அறுவை மருத்துவம்.

surgical suture : அறுவைத் தையல்.

sutra : குருதிக்குறை நோய் : வெப்பமண்டலக் குருதிக் குறை நோய்.

susceptible : மசிவியல்புடைய : 1. எளிதில் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஆட்படுகிற, 2. தடை குறைவான.

susceptibility : மசிவியல்பு : நோயினால் எளிதில் பாதிக்கப்படும் தன்மை, நோயை எதிர்க்க முடியாத நிலை.

suspended heart : தொங்கு இதயம் : இதயமும் மார்பும் பிரிந்து எக்ஸ்ரே படத்தில் நடு மார்பில் இதயம் தொங்குவது போல் தோற்றம். இதனால் உடல்நிலை எந்த குறிப்பிட்டத் தகுந்த பிரச்சினையில்லை.

suspension : இடைநிறுத்தம் : 1. எந்த ஒரு உயிர்ப்பியக்க தற் காலிக இடைநிறுத்தம் 2. ஒரு உடல் பகுதியை தொங்கும் நிலையில் அசையாமலிருக்கும் ஒரு தொங்கும் ஆதரவைக் கொண்டு மருத்துவம் அளித்தல். 3. ஒரு திடப் பொருளின் துகள்கள் ஒரு நீரில் அல்லது மற்றொரு திடப் பொருளுடன் கலந்திருத்தல் கரைந்திருக்க வில்லை. அந்நிலையிலுள்ள ஒரு திடப்பொருள்.

suspensoid : கூழ்மத்தொங்கல் : கலந்துள்ள திடப்பொருள்கள் தொங்கியுள்ள நீர்மத்திலிருந்து தெளிவாக பிரித்தறிய முடிதல்.

suspensory : தொங்கு : 1. 62(5 பிணையம், தசை, எலும்பு போன்ற தாங்குப் பகுதி, 2. ஒரு பகுதியை துக்கி நிறுத்தச் செய்யும் கட்டு அல்லது தொங்கல் கயிறு.

suspiraton : பெருமூச்சு; நெடு மூச்சு.

sustentacular cells : தாங்கணுக்கள் : மற்ற சிறப்பு நிலை அணுக் களைத் தாங்கும் வெளி அணு அடுக்குள்ள அணுக்கள்.

sustentaculum : தாங்கமைப்பு : மற்றொன்றைத் தாங்கும் அமைப்பு.

sutura : தையல்; மூட்டு : இரண்டு படல எலும்புகள் ஒரு நார் முட்டில் இணையும் வகை.

suture : அறுவைத்தையல்; தையல் மூட்டு; இணைவு : அறுவை