பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1059

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sympathetic...

1058

Sympathy


போதும், மனக்கிளர்ச்சி ஏற்படும்போதும் செயற்பட தூண்டுவது இந்நரம்பு மண்டலமேயாகும். தானியங்கும் நரம்பு மண்டலத்தின் இன்னொரு பகுதி துணைப்பரிவு நரம்பு மண்டலமாகும். உடலினைப் பேணி வருவதற்கும், நிறைவு செய்வதற்கும் இது உதவுகிறது.

sympathetic pain : பரிவு நோவு : தொடர்புணர்ச்சியால் ஏற்படும் வலி.

sympathetic opthalmia : பரிவுக் கண் நோய்.

sympathicotonia : பரிவு நரம்பு தொனி : தைராய்டு மிகை நிலையில் பரிவு நரம்பு மண்டலத் தொகுதியின் மிகை தொனி காரணமாக, நாளச்சுருக்கம், மிகை இரத்த அழுத்தம், கைகளில் நடுக்கம் தோன்றும் இயல்பு மிகுந்திருத்தல்.

sympathicotropic : பரிவாளர் : 1. பரிவு நரம்பு மண்டலத்துக்கு விருப்புணர்வை வெளிப்படுத்தும். 2. பரிவு நரம்பு மண்டலம் விரும்பும் ஒரு அமைப்பு அல்லது அதன் மேல் செயல்படும்.

sympathoadrenal : பரிவு அண்ணீரக : பரிவு நரம்பு மண்டலம் மற்றும் அண்ணீரக அகணி தொடர்பான.

sympathoblast : பரிவு அணு மூலம் : அண்ணீரக அகணியை உருவாக்கும் நரம்பு முகடுத்திசுவிலிருந்து தோன்றும் உயிரணு முலம்.

sympathogonia : பரிவு நரம்பு முதிராஅணு : பரிவு நரம்பு மண்டலத்தின் முழுமையாக முதிரா அணு.

sympathogonioma : பரிவு மண்டல முதிரா அணுக்கட்டி : பரிவு நரம்பு மண்டலம் வேறு படுத்தப்படாத உயிரணுக்கள் கொண்ட கட்டி.

sympatholytic : பரிவு நரம்பு மாற்று : நரம்பு முடிச்சுப் பின்னிழைகளிலிருந்து தூண்டல்களை விளைவு உறுப்புகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் அல்லது எதிர்ப்பால், மென்தசைச் சுருக்கத்தையும் சுரப்பிகளின் இயக்கத்தையும் குறைக்கும்.

sympatholytic : பரிவு நரம்பு எதிர்ப்பு மருந்து : பரிவு நரம்பு மண்டலத்தின் விளைவுகளை எதிர்க்கும் ஒரு மருந்து.

sympathomimetic : பரிவு நரம்பு போன்ற : 1. பரிவு நரம்பு மண்டலம் ஏற்படுத்தும் விளைவுகள் போல் தோன்றும் விளைவுண்டாக்கும். 2. அது மாதிரி விளைவுண்டாக்கும் இயக்கி.

sympathy : பரிவுணர்வு : 1. உடலிலுள்ள இணையான உறுப்புகளில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் விளைவை ஏற்படுத்