பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aminoacidaemia

105

aminoplex


முடியாது. எனவே இவை உணவில் இன்றியமையாது சேர்க்கப்படவேண்டும் ஆர்கினைன், ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோ னைன், ஃபினைலாலனின், திரியோனின், டிரிப்டோஃபான், வாலைன் ஆகியவை இன்றியமையா கரிம அமிலங்கள். எஞ்சியவை அவசியமற்ற கரிம அமிலங்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளன.

aminoacidaemia : அமினோ அமில மிகைப்பு : இரத்தத்தில் அமினோ அமிலங்களின் அளவு மிகுதல்.

aminoaciduria : கரிம அமில நோய்; அமினோ அமிலச் சிறுநீர் : சிறுநீரில் கரிமஅமிலம் (அமினோ அமிலம்) இயல்பு அளவுக்கு மேல் இருப்பதால் உண்டாகும் நோய். இது வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்த தவறு இருப்பதைக் காட்டுகிறது.

aminobenzoate : பென்சோவேட் : பேரா அமினோ பென்சாயிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை உப்பு.

aminobutane : நோய் தணிக்கும் மருந்து வகை.

aminocaproic acid : அமினோ காப்ராய்க் அமிலம் : கட்டியாக உறையக்கூடிய நாரியல் கசிவு ஊனிர் (ஃபைப்ரின்) சீர்குலைவதைத் தடுப்பதன் மூலம் நேரடியாகக் குருதிப்போக்கினை நிறுத்தும் வினையைப் புரிகிறது. இது பிளாஸ்மினோஜன் வினை ஊக்கிகளின் செயலைத் தடை செய்கிறது.

aminocrine : அமினோக்ரைன் : அக்கிஃப்ளேவின் போன்ற, கறைப்படுத்தாத ஒரு நோய் நுண்ம (கிருமி) ஒழிப்புப் பொருள்.

aminoglutethimide : அமினோ குளுட்டித்திமிட் : இயக்குநீரை (ஹார்மோன்) சார்ந்த புற்று நோய்களில் அண்ணீரகச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீரை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.

aminoglycoside : அமினோ குளுக்கோசைடு : ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிர்க் கொல்லி குடும்பம். (எ.டு) ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், நெட்டில்மைசின், அமிக்கசின், நியோமைசின்.

aminophylline : அமினோ ஃபைலின் : எத்திலின் டயாமின் கலந்த தியோஃபைலின். இது தியோஃபைலினிலிருந்து எடுக்கப்படும் ஒருவழிப் பொருள்; கரையக் கூடியது. ஈளைநோய் (ஆஸ்த்துமா) குருதியின் அடர்த்தி மிகுதியினால் ஏற்படும் மாரடைப்பு. நெஞ்சுப்பை இழைம அழற்சி ஆகிய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.