பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1060

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

symphsiotomy

1059

synchiria


துதல் 2 மற்றொருவரின் மனம் மற்றும் உணர்வு நிலையைப் பகிர்ந்து கொள்ளுதலும் உணர்வளவில் கவலைப்படுவதும்.

symphsiotomy : இடுப்புக்குழி அறுவை : இடுப்புக்குழியின் முன்பகுதியை வெட்டியெடுத்தல்.

symphysis : கூட்டுக்கணு; ஒருங்கிணைவு : எலும்புகளின் ஒருங் கிணைவு.

symport : ஒரு திசை இயக்கம் : 1. ஒரு உயிரணுப்படலம் ஊடாக இருபொருட்கள் ஒரே திசையில் செல்லும் முறை. 2. உடன்போக்கு.

symptom : நோய்க்குறி; அறிகுறி; உணர்குறி : நோயினை உணர்த்தும் அறிகுறிகள். நோயாளி தானே உணர்ந்து கொள்ளும் நோய்க்குறி தலைவலி, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு போன்றவை மருத்துவர் கண்டறியும் நோய்க் கிருமிகள்.

symptomatic : நோய்க்குறி ஆய்வியல்; நோய்க் குறியியல் : 1. உடலினுள் உள்ள நிலை இருப்பைக் குறிக்கும் காட்டும். 2. குணப்படுத் தாமல் ஒரளவு செளகரியத்துக்காக செய்யப்படும் மருத்துவம்.

symptomatology (symptomatics) : நோய்க் குறியியல் : நோய்க் குறிகள் பற்றி ஆராயும் அறிவியல்.

symptosis : தேய்வு; உடல் மெலிவு : குறிப்பிட்ட பகுதியோ முழு உடலுமோ தேய்தல்.

synapse, synapsis : நரபணுத் தொடர்பு முனை : அடுத்தடுத்துள்ள இரு நரபணுக்களிடையிலான தொடர்புமுனை.

synarthrosis : மூட்டுப்பிணைப்பு : அசையாமூட்டு, உயவுக்குழி வறையில்லா மூட்டு.

syncanthus : ஒட்டிய வழி : கண் குழி அமைப்புகளோடு விழிக்கோளம் ஒட்டியிருத்தல்.

syncephalus : ஒரு தலை இரட்டையர் : ஒரு தலை, ஒரு முகம், நான்கு காதுகள் கொண்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர்.

synchiria : இரு பக்கத் தூண்டல் : உடலின் ஒரு பக்கத் தூண்டல் இரு பக்கங்களுக்கும் அனுப்பப் படும் உணர்வு நிலைக்கோளாறு.