பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1061

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

synchondrosis

1060

syndesmotomy


synchondrosis : குருத்தெலும்பு இணைப்பு : ஒரு குருத்தெலும்பு மூட்டில், ஒரு படிகக் குருத்து அல்லது நார்க் குருத்தெலும்பு இணைப்புப் பொருளாயிருத்தல்.

synchronism : இணை நிகழ்வியல் : இரண்டு அல்லது அதிக நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஏற்படுதல்.

synchrony : இணை நிகழ்வு : ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் அல்லது இரு நிகழ்வுக்கிடையே குறிப்பிட்ட இடைவெளி இருத்தல்.

synchysis : தீப்பொறிக் கண்ணோய்; பளிங்கு நீர்மை : கண் விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண்ம நீர்மம் சிதைவுற்றுத் திரவமாதல்.

syncitium : இணப்பணு : உயிரணுக்கள் இணைவதால் உண்டாகும் பல உட்கரு கொண்ட உயிர்க்கூழ்மத் திரள்.

syncliticism : 1. முதிர் கருத்தலை மற்றும் இடுப்புத் தளங்களுக் கிடையேயுள்ள இணைநிலை. 2. இரத்த அணுக்களின் உயிர்க்கருவும் உயிர்க்கூழ்மமும் இயலபாக ஒரே நேரம் முதிர்ச்சியடைதல் .

synclonus : இணைச்சுரிவு : பல தசைகளின் நடுக்கம் அல்லது துடிப்பிசிப்பு.

syncope : குருதி மயக்கம்; உணர் விழப்பு; மயக்க நிலை; மூர்ச்சை : இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு.

syncytium : பல கருவுள் உயிர்ம அணு : கருவுயிர்கள் பலப்பல அடங்கியிருந்தும் ஒரே உயிர்மமாக அமைந்து செயலாற்றும் ஊன்மத்திரள்.

syndactyly, syndactylism, syndactylia : வாத்து விரல்; இணைவிரல் : வாத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருத்தல்.

syndectomy : துண்டுவெட்டல் : பளிங்குப் படலத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத் துண்டாக இமையிணைப் படலத்தை வெட்டியெடுத்தல்.

syndesmography : மூட்டு இயல்விவரவுரை : எலும்பு இணைப் புத்தசை நாண் பற்றிய ஆய்வியல் விவரவுரை.

syndesmology (arthrology) : முட்டுஇயல் : எலும்பு இணைப்புத் தசை நாண் பற்றி ஆராயும் அறிவியல்.

syndesmosis : எலும்புத்தசை இணைப்பு : எலும்புத் தசை நாண் இணைப்பு.

syndesmotomy : பிணைய வெட்டு : பிணையத்தை அறுத்துப் பார்த்தல்.