பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1062

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

syndrome

106

synkinesis


syndrome : நோய்க் முரித் தொகுதி; நோயியம்; இணைப் போக்கு : ஒரு நோயைக்காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எ-டு: மிகுந்த உடல் வெப்பம், தொண்டை வீக்கம், மெதுவான நாடித் துடிப்பு, அடிக்கடி ஏற்படும் மயக்கம் ஆகியவை இதயத்தின் மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலான தடுக்கிதழ் அடை பட்டிருப்பதைக் குறிக்கிறது.

syndromology : பிறவிக்குறையியல் : பிறவிக் கோளாறுகளின் வகை தொகை காரணம், பாங்கு பற்றிய பிரிவு.

synechia : உறுப்பிணைப்பு; ஒட்டி ணைப்பு : உறுப்புகள் இயல்பு மீறி இணைந்திருத்தல். எ-டு: விழிவெண் படலத்துடன் விழித் திரைப்படலம் இணைந்திருத்தல்.

synechotomy : ஒட்டுதிசுவறுவை : ஒட்டிய திசுக்களின் அல்லது ஒட்டுதிசு வெட்டுதல்.

syneresis : நீரெடுப்பு : ஒரு கூழ்ப் பொருளில் நீர்மப் பகுதி வெளியெடுப்பு.

synergism : ஒத்திசைவியம் : ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மேற்பட்ட கூட்டுப் பொருள்களுக்கிடையே கூட்டுறவு நிலை இடைச்செயல். தனி உட்பொருள்களின் கூட்டு விளைவைவிட அதிகமான விளைவு.

synergism, synergy : ஒருங்கி யக்கம் : மருந்துகள், நுண்ணுயிரிகள், தசைகள் போன்ற இரண்டு இயக்கிகள் ஒருங்கிணைந்து ஒன்றாக இயங்குதல்.

synergist : ஒருங்கியக்கி; கூட்டுச் செயல்; இணை விளைவி; இணை வுறவு : ஒருங்கியக்கத்தில் மற்றொரு கூட்டாளியுடன் ஒத்துழைக்கும் ஒர் இயக்கி.

synergy : ஒத்திசைவு : நொதிகள், மருந்துப் பொருட்கள் இணைந்து செயல்படும்போது கூட்டிய விளைவைவிட அதிக விளைவு.

syngeneic : இனமிலா வகை : 1. இனம் ஒன்றாயில்லாத அதே வகைப்பிரிவு. 2 ஒன்றின் ஒட்டு திசு மற்றொறு ஒன்றுக்கும் பொருந்தும்.

syngraft : இணைஒட்டு : மரபணு வகையில் ஒரே மாதிரி இரு வருக்கிடையே, ஒட்டு அறுவை மாதிரி. எ-டு: ஒரே மாதிரி இரட்டையர்.

synkinesis : துல்லிய இயக்கத்திறன் : துல்லியமான இயக்கங்களை நடத்தக்கூடிய திறன்.