பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1063

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

synecrosis

1062

synovitis


synecrosis : ஒற்றியழிவு : ஒரு குழுவிலுள்ளவர்களில் ஒரு வருக்கொருவர் உள்ள தொடர்பு அவர்களுக்கிடையே கேடு விளைவிக்கும் தன்மையது.

synizesis : அடைப்பு : 1. அடைப்பு அல்லது மூடுதல் 2. பிளவுப் பெருக்கத்தின் முதல் படிநிலையின்போது உட் கருவின் ஒரு பக்கத்தில் நிறமியன் குவிப்பு.

synonym : ஒரு பொருட்பிற சொல் : ஒரு பெயர் அல்லது சொல் வேறொன்றின் பொருளைக் கொண்டிருப்பது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகள் ஒன்றின் அதே பொருள் கொண்டிருப்பது.

synophthalmus : ஒன்றிணைகண் குழி : இரண்டு கண் எலும்புக் குழிகள் ஒன்றிணைந்து ஒரு கண் மட்டுமே கொண்ட ஒரே குழிவறையாக உள்ள ஒரு பிறவிக் கோளாறு.

synorchism : ஒன்றிணைவிரை : இரண்டு விரைகள் ஒரு திரளாக பிறவியிலேயே இணைந்திருப்பது.

synosteology : உடல் மூட்டி இணைப்பியல்.

synosteosis (sy nostosia) : எலும்புக் கூட்டொருமை.

synotosis : எலும்பிணைப்பு மூட்டு : அடுத்துள்ள இரண்டு எலும்புகள் திரண்ட நாரிணைப்புத் திசுவால் இணைக்கப்பட வேண்டிய மூட்டில் தையலிணைப்பு எலும்பாகி, இணைப்பூடே ஒரு முழு ஒட்டிணைப்பு உருவாவது.

synotia : ஒன்றிய காது மடல் : காதுமடல்கள் ஒட்டியிணைந்து, கீழ்த் தாடை எலும்புக் குறை வளர்ச்சியாகி அல்லது இல்லாமலிருப்பது.

synovectomy : மூட்டு உறைச் சவ்வு அறுவை; உயவுச் சவ்வு அறுவை நீக்கம்; மூட்டுப் பை எடுப்பு : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தை வெட்டியெடுத்தல்.

synovia : உயவு நீர் : எலும்பு முட்டிற்குள் கசிந்து வரும் உயவு நீர்.

synovial fluid (synovia) : உயவு நீர்மம் : எலும்பு மூட்டிணைப் பிலுள்ள கசியும் உயவு நீர்மம்.

synovial membrane : மூட்டு உறைச் சவ்வுப் படலம்; மூட்டுறை; நாண் உறை; பசைச் சவ்வு.

synovioma : மூட்டு உறைச் சவ்வுக் கட்டி; மூட்டுப்பை உருவாக்கம் : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் உண்டாகும் கட்டி இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம்.

synovitis : மூட்டு உறைச் சவ்வழற்சி; மூட்டுப்பை அழற்சி :