பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1065

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

syringomyelia

1064

systolic murmur


syringomyelia : தண்டுவடப்புழை : தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழப்பு (வலி, தொடுவுணர்வு மட்டும் இழந்து பிற பின் வரிசை உணர்வுகள் இருப்பது) வளர்ச்சிப் புண்கள், கையின் சிறு தசைகள் நலிவு, கால் உறுப்பில் மேல் இயக்க நரம்பணு பாதிப்பு அறிகுறிகள் தோன்றுகின்றன.

syringotomy : காதுக்குழல் அறுவை : காது உட்குழலில் செய்யப்படும் அறுவை, புழை அறுவை.

syrinx : காது உட்குழாய் : தொண்டையிலிருந்து காதுக்குக் காற்றுக் கொண்டு செல்லும் நுண்குழல்.

syrup : நீர்மக் கரைசல்; இனிப்புப் பாகு : 1. சர்க்கரை பதப்படுத்திய பிறகு உள் சர்க்கரைக் கரைசல். 2. சர்க்கரையின் செறிவுக் கரைசல், 3. சர்க்கரையின் செறிவுக் கரைசலில் மருந்துப் பொருள்களான நீர்மத் தயாரிப்பு.

syssarcosis : எலும்பிடைத் தசைத் தொடர்பு.

system : மண்டலம் : இயக்கப் பகுதிகளின் தொகுதி. எ-டு: நரம்பு மண்டலம், தசை மண்டலம் சீரண மண்டலம்.

System for Indentifying Motivated Abilities (SIMA) : தூண்டு திறன் கண்டறியும் முறை : தூண்டப்படும் திறன்களை அடையாளங் காணபதற்கான முறை மனச்சீர்கேட்டின் அளவைக் கணக்கிடுவதற்கான சோதனை.

systemic : உடல்சார் : 1. முழு உடலை பாதிக்கும் பொதுவான, 2. ஒரு தொகுதி தொடர்பான.

systemic circulation : முழு உடல் குருதியோட்டம்; மண்டலச் சுற் றோட்டம் : உடலின் ஒர் உறுப்பு மட்டும் சாராமல், உடல் அமைப்பு முழுவதும் சார்ந்து இரத்தவோட்டம் நடைபெறுதல். ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்பட்டு உடல் முழுவதும் பாய்ந்து ஆக்சிஜன் நீக்கமடைந்து மீண்டும் வலது மேலறைக்கு வருதல்.

systole : இதயச் சுருக்கம் : நெஞ்கப்பைச் சுருங்கி இயங்குதல்; குருதி நாளச் சுருங்கியக்கம்.

systole pressure : இதயச் சுருக்க அழுத்தம்.

systolic murmur : இதய முறுமுறுப்பு; சுருங்கல் முணுமுணுப்பு :