பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1070

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tamponade

1069

Tapia's syndrome


tamponade : குருதி அடைப்பான் : குருதிப் போக்கினை நிறுத்து வதற்கான அடைப்பான்; அறுவை மருத்துவத்தில் குருதியை நிறுத்த அடைப்பானைப் பயன்படுத்துதல்.

tandem : கதிர் வளை கம்பி : கதிரியக்க அண்மை மருத்துவத்தில் கருப்பைக்குள் செருகப்படும் வளைந்த துருப்பிடிக்கா எஃகுக் கம்பி.

tang : சுவை கூர்முனை : 1. உறைப்பான சுவை அல்லது காரநெடி 2. ஒரு உளி அல்லது கத்தியின் நீள ஒடுங்கிய துருத்தம்.

tangentiality : குறிக்கோள் பிறழ் மாறிய நிலை : குறிக்கோள் நோக்கிய சிந்தனை நிலைகள் பெறமுடியாத கோளாறை ஒருவர் வெளிப்படுத்துவது. விரும்பிய குறிக்கோளின் விரும்பிய நிலையை நோயாளிகள் அடைய முடிவதில்லை.

tangential speech : பேச்சில்லா : தேவையான பொருளை விட்டு விட்டு, மிகவும் பொருத்தமில்லாதவற்றைப் பேசிப்பேசி திரும்ப பேசவேண்டிய பொருளுக்கு வராமல் பேச்சாளர் அலையும் நிலை.

tannafax : டான்னாஃபாக்ஸ் : மேலீடான தீப்புண்கள், சுடு புண்கள் ஆகியவற்றுக்குப் பயன் படுத்தப்படும் டேலிக் அமிலம் அடங்கிய மருந்தின் வணிகப் பொருள்.

tanned red cells : டேனிய சிவப்பணுக்கள் : டேன்னிக் அமிலம் சேர்ந்ததால் இரத்தச் சிவப்பணுக்கள், விளைவிய ஏந்திகளாகச் செயல்படமுடிதல்.

tannic acid : டேனிக் அமிலம் : கருவாகிக் கரணையிலிருந்து எடுக்கப்படும் பழுப்புநிறப் பொடி, உறைய வைக்கும் குணமுடையது.

tantalum : டாண்டாலம்(வெப்பம்) : வெப்பத்தினாலும் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப் படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம். உடலில் நலிவுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டுவதற்குக் கம்பி வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எ-டு: பெரிய குடலிறக்கத்தைப் பழுது பார்க்கப் பயன்படுகிறது.

tapering arch : குவியும் வளைவு : கடைவாய்ப் பற்களிலிருந்து வெட்டும் பற்கள் வரை குவியும் பல் வரிசை வளைவு.

tapeworm : நாடாப்புழு : தட்டைப்புழு, ஒட்டுயிராக வயிற்றுக்குள் இருக்கும் புழு.

Tapia's syndrome : டேபியர் நோயியம் : ஸ்பெயின் நாட்டு மருத்துவர் ஆன்ட்டோனி கார்யோ சியாடேபியாவில்