பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1072

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tarsoplasty

1071

tattooing


விரல்கள் கொண்ட பகுதி ஆகியவை தொடர்பான.

tarsoplasty : கண்ணிமை ஒட்டுறுப்பு அறுவை; இமைச் சீரமைப்பு இமையமைப்பு : கண்ணிமையில் செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்.

tarsorrhapy : கண்ணிமைத் தையல்; இமைத்தைப்பு; இமைச் சீரறுவை :விழிவெண்படலம் உணர்விழப்பில் இருக்கும் போது அல்லது அது குண மடைந்து வரும்போது அதனைப் பாதுகாப்பதற்காகக் கண்ணிமைகளை ஒன்றாக இணைத்துத் தைத்துவிடுதல்.

tarsus : 1. கணுக்கால் எலும்பு; முன் பாதம் : பாதத்திலுள்ள ஏழு சிறிய எலும்புகள். 2. கண்ணிமை ஒட்டுத்தசை இமைத்தசை : கண்ணிமை ஒவ்வொன்றிலும் உள்ள அடர்த்தியான நீண்ட இணைப்புத் தசைத் தகடுகள்.

tartar : பல் ஊத்தை; பற்காரை :' பற்களில் படியும் ஊத்தை.

tartar emetic : பேதி வாந்தி மருந்து : பேதி, வாந்திக் கோளாறு களைக் குணப்படுத்துவதற்கான மருந்து.

tart cell : பொதியப்ப அணு : துண்டுபட்ட நிறமேற்கா கரு வெள்ளணுவில் சில உட்கருத் துண்டுகள் நிலைத்து ஒரு முழு வளர்ச்சியடைந்த செந்தோல் நோய் அணுவாக பரிணாம வளர்ச்சி பெறும் நிலை.

taste : சுவையுணர்வு : நாக்கின் பரப்பிலுள்ள, உணர்வு உறுப்பு களைப் பொறுத்துள்ள வேதிய உணர்வு. நரம்புத் தூண்டல்கள் நாநரம்பு மற்றும் நாத் தொண்டை நரம்புகளின் வழியாக, முறையே நாக்கின் முன் மூன்றிலிரு பகுதி மற்றும் நாக்கின்பின் மூன்றிலொரு பகுதியிலிருந்து மூளைக்குச் செல்கின்றன.

taste-bud : சுவை அரும்பு : நாக்கிலுள்ள சுவை நரம்பின் நுனியில் தனி வகையான நரம்பணுக்கள் உள்ளன. இந்தத் தனி வகை உயிரணுக்களும் நரம்பு முனைகளும் ஒன்றாக இணைந்து சுவை அரும்புகளாக அமைந்துள்ளன.

tattooing : பச்சை குத்தல் : நிரந் தரமான பாங்குப்படவடிவங்