பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1073

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

taurine

1072

teeth


களை தோலில் குறிக்கும் பழக்கம் நிறமிகளின் நுண் அளவுகளை ஊசிமூலம் தோலில் செலுத்தி அழியாக் குறியிடல்.

taurine : டாரின் : பித்த நீரில் உள்ள டாரோகோலிக் அமிலத் திலிருந்து பெறப்படும் பொருள்.

taxon : வகுப்புத் தொகுப்பு : ஒத்த தன்மைகளின் அடிப்படையில் மட்டும் வேறுபாட்டளவை கருத்தில் கொள்ளாமல் தொகுத்தல்.

Tay-Sachs disease : டேய்-சாக் நோய் : B-D-N-அசிட்டில் ஹெக் சோசாமிடேஸ் என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் GM என்ற ஒரு குறிப்பிட்ட கொழுப்புப் பொருள் மிகுதியாகச் சேர்வதால் உண்டாகும் அடிப்படைக்கோளாறு.

TB : டீபி : டியூபர்குளோசிஸ் எனப்படும் காச நோய்.

T-bandage : "T" வடிவ கட்டுத் துணி; 'T' உருக்கட்டு : உடலில் விரைப்பைக்கும் மலவாய்க்கும் இடைப்பட்ட விடபம் என்ற பகுதியில் கட்டுப்போடுவதற்குப் பயன்படுத்தப்படும் 'T' வடிவக் கட்டுத் துணி.

T cel : 'டீ' அணு : 'டி' நிணவணு. ஏமக்காப்பு அமைப்பின் மிகவும் சிக்கலான தைமஸ்கரப்பியிலிருந்து பெறப்படும் உயிரணு, உயிரணு வழியான ஏம விளைவுகளை செயல்படுத்த உதவுகிறது.

tea pot stomach : தேநீர்ப்பானை வயிறு : இரைப்பையின் சிறு வளைவு மிகவும் குறுகலாய் இருப்பது.

tear-bag : கண்ணீர்ப்பை.

tear-duct: கண்ணீர் நரம்பிழை.

tear-gland : கண்ணீர் சுரப்பி.

tears : கண்ணீர் : கண்கடையில் உள்ள கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து சுரக்கும் நீர். இதில் ‘லைசோசைம்’ என்ற செரிமானப் பெருள் (என்சைம்) அடங்கியுள்ளது; இது நோய் நுண்மத்தடையாகச் செயற்படுகிறது.

tease : இழையெடு. நுண்ணோக்கி சோதனைக்காக திசுவை இழுத்துப் பிரிப்பது அல்லது ஊசிகளால் பிரிப்பது.

teeth : பற்கள் : மெல்லுவதற்குப் பயன்படும் அமைப்பு. இவற்றில் குறிப்பிட்ட பருவத்தில் விழக்கூடியவை. இவை 7 வயதுக்குள் விழுந்து அந்த அடத்தில் நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்களின் மொத்த எண்ணிக்கை 32. இவை 20 வயதுக்குள் முழுமையாக அமைந்துவிடும். பற்களின் அமைப்பினைப் பல் மருத்துவர்கள் வரைபடமாக வரைந்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட பருவத்தில் விழுந்துவிடும் முதல் நிலைப் பற்களை A-E எழுத்