பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1074

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

teething

telormotry


துக்களால் குறிப்பிடுகிறார்கள். இதன்படி, இடது மேல் உளிப்பல்லும் கடைசியின் கடை வாய்ப்பல்லும் A-E என்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

நிரந்தர அல்லது இரண்டாம் நிலைப் பற்கள் எண்களால் குறிப்பிடப் படுகின்றன. இடது மேல் மைய உளிப்பல்லும், கடைசி பின்கடை வாய்ப் பல்லும் (ஞானப்பல்),18 என்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

teething : பல்முளைப்பு.

tegument : தோற் போர்வை; பொதிவை : விலங்குடலின் இயற்கைப் போர்வை.

tegmentum : உறை : 1. உறை அல்லது கூரை, 2. நடுமூளையின் மூளைக் கால்களின் புறப்பகுதி.

teichoic acid : டெய்கோலிக் அமிலம் : கிராம் சாயமேற்கும் நுண்ணுயிர் அணுச்சுவர்களின் பகுதிப் பொருள்.

telangietasis : தந்துகி விரிவாகக்குருதிக் கிளைக் குழல் விரிவு : உடற்பரப்பினுள் தந்துகிகளை விரிவடையச் செய்தல்.

telangiitis : நுண்நாள அழற்சி; தந்துகியழற்சி : தந்துகிகளின் அழற்சி.

tolocardiography : தொலைநிலை இதய வரைபடப் பதிவு : நோயாளிகளிடமிருந்து தூண்டல்களை தூரத்திற்கு அனுப்பி இதயமின் வரை படத்தைப் பதிவு செய்தல்.

telediagnosis : தொலை நோயரிதல் : ஒரு நோயறியும் நிலையத் திலுள்ள நோயாளியின் கடத்தப்பட்ட விவரங்களை (தரவுகளை) ஆராய்ந்துநோயைக் கண்டுபிடித்தல்.

telefluoroscopy : தொலை ஒளிர்திரை உருநோக்கி : ஒளிர்திரை தரும் உருவங்களை தூர இடத்துக்கு அனுப்பி தொலைக் காட்சியில் காணுதல்.

telemedicine : தொலை மருத்துவம் : தூரமான இடத்திலுள்ள நோயாளி பற்றிய செய்திகளையும் உருவத்தையும் தொலைத் தொடர்புக் கருவியைப் பயன்படுத்தி அனுப்புதல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற அது பயன்படுகிறது.

telemetry : தொலைக்கணிப்பி : ஒருவரிடமிருந்து தரவுகளை