பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1078

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tetany

1077

T fracture


உணர்ச்சித் தூண்டுதல் காரணமாக தசைகள் தொடர்பாகச் சுருக்கமுறுகின்றன நிலை.

tetany : முறை நரப்பிசிவு நோய்; சுண்ணக்குறை விரைப்பு; வில் வாதம் : உடலின் ஒரு சிறு பகுதியில் அதாவது கைகள், பாதம், குரல்வளை போன்றவற்றில் இரத்தத்தில் கால்சிய அயனிகள் (அயனியாக்கிய கால்சியம்) இல்லாததன் காரணமாகத் தசைகள் சுருங்கிவிடுவதால் ஏற்படும் நோய்.

tetrachloroethylene : டெட்ராகுளோரோஎத்திலின் : கொக்கிப்புழுவை அகற்றுவதற்குக் கொடுக்கப்படும் மருந்து.

tetracoccus :நாற்கூற்றுக் கிருமி : மூட்டுப் பூச்சி தொடர்புடைய பாக்டீரியா. இது நான்கண் தொகுதியாகக் கனசதுர வடிவில் அமைந்திருக்கும்.

tetracosactrin : டெட்ராகோ சேக்ட்ரின் : கூட்டினைப்பாக்க கார்ட்டிகோடிராபின், அண்ணீரகப் புறணியின் இயக்கத்தை சோதிக்கப் பயன்படுகிறது.

tetracycline : டெட்ராசைக்ளின் : நோய்க் கிருமிகளைக் கொல்லும் பல்வேறு மருந்துகள் தொகுதி. இது இரைப்பை குடல் கோளாறுகளை உண் டாக்குவதில்லை. உடலின உயிரணுக்களின் ஒளியுமிழும் இயல்புடையது. இம்மருந்தை நிறுத்தியதும் இந்த ஒளி மறைந்துவிடும். புற்றுநோய் உயிரணுக்களில் மருந்தை நிறுத்திய பிறகும் இந்த ஒளி 24-30 மணிநேரம் நீடித்திருக்கும்.

tetradactylous (tetrdectyl) : நான்கு விரலுடைய; நான்கு விரலிகள் : ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் இருத்தல்.

tetradecapeptide : டெட்ரா டெக்காபெப்டைடு : 14 அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரு செரிமானப் பொருள்.

tetraplegia : நான்கு உறுப்பு வாதம்; நாலங்க வாதம் : கைகளும், கால்களும் செயலிழத்தல்.

tetraploid : நான்மயம் : இது பாலணுக்களிலுள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை இயல்பான எண்ணிக்கை 2 (இருமயம்) இதில் நான்கு இருப்பதால் நான்மயம்.

tetrasomy : நாற்கீற்று : ஒரேவீகை குரோமோசம்கள் (நிறக்கீற்று) இரண்டு மேலதிகமாக இருப்பது.

T fracture : 'டீ' முறிவு : காலடி நீட்டிய நிலையில் உயரத்திலி ருந்து விழும்போது, தொடையெலும்பு நளக எலும்பின் மேல்தளத்தில் வலுவானதாக்கத்