பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1079

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thalamectomy

1078

theobromine


தால் தொடை எலும்பின் கீழ் முனையில் ஏற்படும் ஒருவகை கண்டிடை முறிவு. நெடுக்காகவும் குறுக்காகவும் எலும்பு முறிந்துள்ள நிலை.

thalamectomy : கருவகம் நீக்கம் : தலைமத்தின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.

thalamic syndrome : கருவக நோயியம் : கருவகத்தில் அல்லது கீழே உள்ள உணர்வுத் தடங்களின் திசு அழிவால் குறைவான தூண்டல்களால் தீவிரவலி மற்றும் ஒரு பக்க விழப்பு.

thalamotomy : மூளையறை அறுவை : மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அழித்து விடுதல் கட்டுப்படுத்த முடியாத வலியை நிறுத்துவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது.

thalamus : மூளை நரம்பு முடிச்சு தலைமம் : மூளையிலிந்து நரம்பு வெளிப்படும் இடம். மூளையிலிருந்து உடம்பு முழுவதற்கும் உணர்வுத் துண்டல்கள் இங்கிருந்து செல்கின்றன.

thalassemia : தாலசேமியா : இரத்தித்தில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. இந்நோய் கண்டவர்களுக்கு உடலில் போதிய செங்குருதியணு உற்பத்தியாகாமல், சிவப்பணுப்பற்றாக்குறை ஏற்படும் இந் நோயாளிகளுக்கு ஆயுள் முழுவதும் 3-4 வாரங்கள் இரத்தம் செலுத்த வேண்டும். ஆனால், அடிக்கடி இரத்தம் செலுத்துவதால், உடலில் அயச் சத்து அதிகமாகி, நோயாளி விரைவில் இறந்து விடுகிறார். எனவே இந்த அதிக அயச்சத்தை அகற்ற வேண்டும். அதற்கு டெஸ்ஃபரால் என்ற மருந்து மட்டுமே இது வரைக் கிடைத்து வந்தது. இப்போது கெல்ஃபெர் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

thallium : தாலியம் : கனமான, மெதுவான இளகும் உலோக கதிரியக்கத் தனிமம் (அணு வெண்-81, அணுவெடை-204:37, ஒப்பெடை-1185) இதன் உப்புகள் நச்சுத்தன்மை உடையவை.

thanatology : மரணவியல் : மரணம் பற்றி ஆராயும் அறிவியல்.

theaism : தேநீர்நிலை : அளவுக்கதிக தேநீர் குடிப்பதால் நாட் பட்ட கஃபீன் நச்சமைவு.

theca : தசைநாண் உறை; நாணுறை : தசை நாணை மூடி இருக்கும் உறை.

'thena : உள்ளங்கை-உள்ளங்கால்; அங்கை : உள்ளங்கை, உள்ளங் கால் பகுதி.

theobromine : தியோபுரோமின் : காஃபி தேயிலையிலுள்ள காஃபின்