பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1080

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

theophorin

1079

thermophile


என்னும் மர உப்புச் சத்துடன் தொடர்புடைய ஒரு மருந்து. ஆனால் அதைவிடக் கிளர்ச்சி ஊட்டும் திறன் குறைவானது. அதைவிட அதிகச் சிறுநீர் தூண்டும் திறனுடையது. தொண்டை நோய்களுக்குப் பயன்படுகிறது.

theophorin : தியோஃபோரின் : ஃபெனிண்டாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

theophylline : தியோஃபில்லின் : காஃபின் தொடர்புடைய, சிறு நீர்க்கழிவைத் தூண்டக்கூடிய ஒரு மருந்து. எனினும், மூச்சடைப்பு, மூச்சுவிடுவதில் இடர்ப்பாடு, ஈளை நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

therapeutic embolization : குருதிக் குழாயடைப்பு : ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல்.

therapeutics : நோய் நீக்க இயல்; நோய் நீக்கக் கலை; மருந்து முறையியல்; பண்டுவம் : நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து இயல்.

therapeutic vaccine : நோய் நீக்க அம்மைப் பால்.

therapeutist : நோய் நீக்க வல்லுநர்.

therapist : சிகிச்சையாளர் : சிகிச்சையளிப்பதில் திறமை வாய்ந்த ஒருவர்.

therapy : நோய் நீக்கத் துறை.

thermal : வெப்பம் சார்ந்த; வெப்பம் தொடர்பான.

thermoanalgesia : சுடுவலி :வெப்ப முட்டுவதால் வலி உண்டாகும் நிலை.

thermoanaesthesia : தட்வெப்பு உணர்விழப்பு : வெப்ப உணர்வையும் குளிரையும் உணரும் தன்மையிழப்பு.

thermogenesia : வெப்பாக்கம் : மனித உடலில் வெப்பம் உண்டாதல்.

thermolabile : வெப்பச்சீர்குலைவு; வெப்பத்தில் மாறும் : வெப்பத் தினால் எளிதில் மாற்றப் பெறத்தக்க அல்லது சீர் குலையத்தக்க.

thermometer : வெப்ப மானி; வெப்பஅளவி : வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற்கான கருவி. இதில் அடங்கியுள்ள பொருளின் கன அளவைப் பொறுத்து வெப்ப நில அளவிடப்படுகிறது. மருத்துவ வெப்பமானியில் உடலின் குறைந்த அளவு வெப்ப நிலையிலிருந்து ஏறுமுகமாகக் குறிக்கப்பட்டிருக்கும்.

thermophile : உயர்வெப்ப உயிரிகள்; மிகைவெப்ப வளர் உயிரிகள்.