பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1081

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thermoreceptor

1080

thiethylperazine


உயர் வெப்ப நிலைகளில் வளரக்கூடிய நுண்ணியிரிகள்.

thermoreceptor : வெப்ப ஏற்பி : உடல் வெப்பம் அதிகமாகும் போது தூண்டப்படும் ஒரு உணர்வு ஏற்பி.

thermoregulatory centre : வெப்ப ஒழுங்கமை மையம் : வெப்ப முண்டாக்கலையும் வெப்பமிழப்பையும் கட்டுப்படுத்தி, ஒரு இயல்பான உடல் வெப்ப நிலையை நிலைப்படுத்த கீழ்தலைமத்தில் உள்ள ஒரு மையம்.

thermoscan : வெப்ப நுண்ணாய்வுக்கருவி; வெப்பத் துழாவு : ஒரு பகுதியில் வெப்பப் பரவலை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒரு கருவி. இது 0°C வரையில் வெப்பநிலையைப் பதிவு செய்யக்கூடியது. இரத்தம் பாய்தல் தொடர்பான கோளாறுகளை ஆராய இது பயன்படுகிறது.

thermoscope : வெப்ப நிலை மாற்றங்காட்டி; வெப்ப மாற்ற நோக்கி : வெப்பநிலை மாறுதல்களைக் காட்டும் கருவி.

thermostable : வெப்பத்தால் மாறாத; மிகைவெப்ப மாற்றத் தகவு; வெப்ப நிலைப்பு : வெப்பத்தினால் பாதிக்கப்படாத, உயர் வெப்பத்தினால் மாற்ற மடையாத.

thermostat : வெப்பநிலை காக்குங்கருவி : வெப்ப அளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் காட்டுவதற்கான கருவி.

thermotherapy : வெப்ப மருத்துவம் : வெப்பத்தின் மூலம் நோய் களைக் குணப்படுத்தும் முறை.

thiacetazone : தியாசெட்டாசோன் : காசநோய்த் தடுப்புக்கான செயற்கைக் கூட்டுப்பொருள்.

thiambutosine : தியாம்புட்டோசின் : தொழுநோய்த் தடுப்புக்கான ஒரு மருந்து குறைந்த நச்சுத் தன்மையுடையது.

thiamine : தையாமின் : கார்போ ஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் தொடர்புடையது. தவிட்டான் (பெரிபெரி) போன்ற தையாமின் குறைபாட்டுக் கோளாறுகளுக்கும், சிலவகை நரம்பழற்சிகளுக்கும் பயன்படுகிறது. இதன் பற்றாக்குறையால் மனக்குழப்பம் உண்டாகலாம்.

thiazides : தையாசைடுகள் : சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்று.

thiethylperazine : தையெத்தில் பெராசின் : சமனப்படுத்தும் ஃபெனாத்தியாசின் மருந்துகளில் ஒன்று. இது குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.