பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1085

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thrombectomy

1084

thrombocytosis


தலால் குருதிக்கட்டி சுருங்குதலில் குறை.

thrombectomy : குருதிக்கட்டி அறுவை; குருதிக்குழாய் உறைவு நீக்கம் : நீர் இரத்த நாளத்தினுள் உறைந்துள்ள இரத்தத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

thromboangiitis : நாளக் குருதி உறைவு; குருதிக்குழாய் சுழற்சி உறை : வீங்கிய நாளத்திகுள் குருதி உறைதல்.

thromboarteritis : தமனிக்குருதி உறைவு : ஒரு தமனியில் குருதி உறைவுடன் வீக்கம் உண்டாதல்.

thromboclasis : குருதியுறை கட்டிகரைதல் : குருதியுறைகட்டி கரைந்துவிடுதல்; குருதியுறை அழிவு.

thrombocytopoiesis : தட்டணுவாக்கம் : இரத்தத் தட்டணுக்கள் உருவாதல்.

thrombocyte : தட்டணுக்கள்; குருதித் தட்டணுக்கள் : குருதி உறைவில் பங்கு பெறும் தட்டணுக்கள்.

thrombocythaemia (thrombocytosis) : தட்டணுப் பெருக்கம்; குருதித் தட்டணு மிகைப்பு : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் தட்டணுக்கள் அதிகமாக இருத்தல். இதனால் குருதி நாளங்களினுள் குருதி உறைவு ஏற்படும்.

thrombocytopaenia : தட்டணுக் குறைபாடு; குருதித் தட்டணுக் குறை : இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருத்தல். இதனால், காயங்கள் ஏற்படும் போது நெடுநேரம் இரத்தம் வெளியேறும்.

thrombocytopaenic purpura : தட்டணுச் செம்புள்ளிநோய் : இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டு விட்டு இரத்தம் கசிதல், தோலின் மேல் கருஞ் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும் ஒரு நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உண்டாகிறது. இதில் இரத்தக் கசிவு நெடுநேரம் நீடிக்கும்.

thromboembolic : குருதிக் குழாயடைப்பு : குருதிக்கட்டி விடுபட்டு குருதியோட்டத்துடன் உடலின் இன்னொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குருதி நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்.

thrombocytosis : தட்டணுமிகை : புறநாள இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.