பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1087

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thymol

1086

thyroid


thymol : தைமால் : நறுமணக் கறியிலைச் செடியிலிருந்து எடுக்கப்படும் நோய் நுண்மத் தடை எண்ணெய், வாய்கழுவு நீர்மங்களிலும், பல் மருந்துகளிலும் பெரிதும் பயன்படுகிறது. கொக்கிப் புழுவை நீக்கவும் கொடுக்கப்படுகிறது.

thymosin : தைமோசின் : கழுத்துக் கணையச் சுரப்பியின் புற அடர்ப்படல உயிரணுக்களால் சுரக்கப்படும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கருத்துக் கணையச் சுரப்பியிலுள்ள நிணநீர் வெள்ளணு உற்பத்தியைத் துண்டுகிறது.

thymus (thymus gland) : கழுத்துக் கணையச் சுரப்பி : மார் பெலும்புக்குப் பின்புறம் கேடயச் சுரப்பியை மேல் நோக்கி நீண்டிருக்கும் ஒரு சுரப்பி, இது குழவிப்பருவத்திலேயே நன்கு உருவாகியிருக்கும் பருவமடையும் போது முழுவடிவளவைடையும். பின்னர் நிணநீர்த் திசுவுக்குப் பதில் கொழுப்புத் திசு அமையும். இது நோய்த்தடைக் காப்புத் தன்மையுள்ளது. இதன் நோய்த் தடுப்பு நடவடிக்கை மூலம் தானாகவே நோய்த்தடைக் காப்பு ஏற்படுகிறது. ஏமத்திறன் உருவாகும.

thyroary tenoid : தைராயிடு கேடய சட்டுவம் : குரல்வளையின் கேடயக் குருத்தெலும்பு மற்றும் சட்டுவக்கு குருத்தெலும்பு தொடர்பான.

thyrocalcitonin : தைரோகால் சிட்டோனின் : தைராயிடு சுரப்பியால் உருவாக்கப்படும் பல பெப்டைடு இயக்குநீர்.

thyrocardiac : தைராயிடு கேடய இதய : தைராயிடு சுரப்பி மற்றும் இதயம் தொடர்பான.

thyroglobulin : தைரோகுளாபுலின் : அயோடின் கொண்ட புரதம்.

thyroglossal : தைராயிடுநாவு : தைராயிடு சுரப்பி மற்றும் நாக்கு தொடர்பான.

thyroglossal fistula : கேடய நாக்குப்புரை; நாக்கு-கேடயச் சுரப்பி : கேடயச்சுரப்பிக் குழாய் அடைபடுவதால் கழுத்திலும், நாக்கிலும் ஏற்படும் புரை. இது கழுத்தின் ஒரு பக்கத்தில் தோன்றி நாக்கின் பின் பகுதி வரைப் பரவுகிறது.

thyrohyoid : தைராயிடு கவையெலும்பு : தைராயிடு சுரப்பி அல்லது குருத்தெலும்பு மற்றும் கவையெலும்புத் தொடர்பான.

thyroid : கேடயச் சுரப்பி : கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி. இது தைராக்சின் என்ற சுரப்பு நீரைச் சுரக்கிறது. இந்நீர் வளர்சிதை மாற்ற வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. எருது,