பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1088

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thyroid cartilage

1087

thyrotrophic (thy..


செம்மறியாடு அல்லது பன்றியின் கேடயச்சுரப்பியிலிருந்து இது வாணிக முறையில் தயாரிக்கப் படுகிறது. கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழப்பதால் உண்டாகும் அறிவு மந்தத்திற்கு இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.

thyroid cartilage : கேடயக் குறுத்தெலும்பு : சங்குவளைக் குருத்தெலும்பு.

thyroidectomy : தைராயிடு சுரப்பி நீக்கம் : தைராயிகெட்டி, கழலை மற்றும் தைராயிடு மிகை நிலையில் தைராயிடு சுரப்பி முழுவதையும் அல்லது பகுதியை அறுத்து நீக்குதல்.

thyroid gland(throid body) : கேடயச் சுரப்பி : கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி.

thyroidism : தைராயிடுமிகை : தைராயிடு சுரப்பியின் மிகு (சுரப்பால்) இயக்கத்தால் ஏற்படும் நிலை.

thyroid notch : கேடய வளைவு.

tydyroidectomy : கேடயச் சுரப்பி அறுவை : கேடயச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

thyroiditis : கேடயச் சுரப்பி அழற்சி : கேடயச் சுரப்பியில் ஏற்படும் வீக்கம்.

thyrotoxic crisis : கேடயச் சுரப்பி நச்சுநோய் : நோயாளியிடம் கேடயச் சுரப்பி நச்சு காரணமாகத் திடீரென ஏற்படும் நோய், கேடயச் சுரப்பி அறுவை மருத்துவத்துக்கு நோயாளியை சரிவரத் தயார் செய்யாவிட்டால், அறுவை மருத்துவத்துக்குப்பின் இது ஏற்படலாம்.

thyrotoxicosis : கேடயச் சுரப்பி நோய் : கேடயச் சுரப்பியில் தைராக்சின் என்ற இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உண்டாகும் நோய் அதிக வியர்வை. அதிகப் பசி எடை குறைதல், கைகளை நீட்டும்போது நடுக்கம், கண் பிதுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். பொதுவாக பெண்களுக்கு இது அதிகம் உண்டாகும்.

thyrotrophic (thyrotrophin) : கேடயச் சுரப்பி ஊக்குமருந்து : கேடயச் சுரப்பியில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதை ஊக்குவிக்கும் மருந்து.