பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1089

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thyretropic...

1088

tic douloureux


thyrotropic harmons : தைராயிடுசுரப்பூக்கு இயக்குநீர் : பிட்யூட்டரி (மூளையடி) சுரப்பியின் முன் பகுதியால் வெளிப்படுத்தப்படும், தைராயிடு சுரப்பை ஊக்குவிக்கும் இயக்குநீர் (டீ.எஸ்.ஹெச்).

thyrotropin releasing hormone : தைரோட்பின் வெளிப்படுத்தும் இயக்குநீர் : பிட்யூட்டரி (மூளையடி) சுரப்பியைத் தூண்டி தைராடு சுரப்பூக்கு இயக்குநீரை சுரக்கத் தூண்டும், கீழ் தலைமம் வெளியிடும் இயக்குநீர்.

thyrotropin : தைரோடிராப்பின் : பிட்யூட்டரி (மூளையடி) சுரப்பி வெளியிடும் இயக்குநீர் தைராயிடு சுரப்பியைத் தூண்டுகிறது.

tibia : முன்கால் எலும்பு; கால் முன்னெலும்பு : கீழ்க்கால் எலும்பு. காலின் கீழ்ப்பகுதியிலுள்ள இருஎலும்பு (முழங்கால்தண்டு).

tibiofibular : Opdrard argibų; சிம்பு எலும்பு சார்ந்த முன்கால் எலும்பும், காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பும் தொடர்புடைய.

tibione : டிபியோன் : எலும்புருக்கி நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து.

ticarcillin : டிக்கார்சில்லின் : சூடோமோனாஸ் கிருமியை தீவிரமாக பாதிக்கும் கூட்டினை பெனிசில்லின்.

thyroxine : தைராக்சின் : கேடயச் சுரப்பியில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. கேடயச் சுரப்பநீர் சுரத்தல் குறைவாக இருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது.

tic : முகத்தசை இசிப்பு : முகத் தசைகளின் இசிப்பு நோய் கார ணமின்றித் தன்னையறியாமலேயே முகத்தசைகளைச் சுரித்தல். இது பழக்கம் அல்லது உளவியல் காரணமாக ஏற்படுகிறது.

ticdouloureux : முகச்சுரிப்புவலி : இயக்கம், உணர்ச்சி, சுவை ஆகிய மூன்றையும் தூண்டும் மண்டை நரம்புப் பகுதியில் ஏற்படும் தாங்க முடியாத வலிப்பு வலி.