பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amniotic cavity

108

amoeba


வயிற்றுச் சுவரின் வழியாகச் செலுத்திக் கருவையும், கருப்பைத் திரவத்தையும் பார்ப்பதற்கு உதவும் ஒரு கருவி, கருப்பைத் திரவம் மஞ்சளாக அல்லது பச்சையாக இருந்தால், அதில் அபினிக் அமிலம் கலந்து இருப்பதைக் குறிக்கும். இது கருவின் நோய் கண்டிருப்பதைக் காட்டுவதாகும்.

amniotic cavity : கருச்சவ்வுக்குழி : குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்கும், தொடக்க நிலையில் உள்ள (முதிராத) கருமுளைக்கும் இடையிலுள்ள திரவம் நிரம்பிய குழிவு.

amniotic fluid : கருப்பைத் திரவம் ; பனிக்குட பாய்மம் : குழந்தை கருப்பையிலிருக்கும் காலம் முழுவதும், கருப்பைச் சவ்வும், முதிர்கரு உற்பத்தி செய்யும் ஒரு திரவம், இது முதிர்கருவுக்குப் போர்வை போல் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திரவம், தீவிரமாக வேதியியல் பரிமாற்றங்கள் நடைபெறும் ஒரு ஊடு பொருளாகும். இதனைக் கருச் சவ்வுக் குழியைச் சுற்றியுள்ள உயிரணுக்கள் சுரந்து, மீண்டும் ஈர்த்துக் கொள்கின்றன.

amniotomy : கருப்பை பிளவு உறுத்தல் : முதிர்கருச் சவ்வுகளைச் செயற்கை முறையில் பிளவுறுத்துதல். பிள்ளைப்பேற்று வலியை விரைவு படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

amnioebiform : வயிற்றுடலி வடிவமுள்ள.

amobarbital : அமோபார்பிட்டால் : இது ஒரு தூக்கமருந்து சில மணி நேரங்களுக்கு மட்டும் பயனளிப்பது.

amodiaquine : அமோடியாக்குயின் : மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஒரு வகை மருந்து. அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படும்.

amoeba : அமீபா ஓரணுவுயிர்); நெகிழி : ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இது தன்னைத் தானே பிளவுபடுத்தி கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. இதில் ஒரு வகையான "என்டாமீபா" என்ற நுண்ணுயிர் மனிதரிடம் வயிற்று அளைச்சல் (சீதபேதி) உண்டாக்குகிறது.

ஓரணுவுயிர்
ஓரணுவுயிர்
அமீபா ஓரணுவுயிர்