பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1090

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tick

1089

tissue


tick : சன்னி ஒட்டுண்ணி; பட்டை உண்ணி; உண்ணி : இரத்தத்தை உறிஞ்சும் ஒர் ஒட்டுண்ணி. இது மறுக்களிப்புக் காய்ச்சல், சன்னி காய்ச்சல் போன்றவற்றைப் பரப்புகிறது.

tick-tack : இருதயத் துடிப்பு : நாடியடிப்பு.

tidal air : மூச்சுயிர்ப்புக் காற்று; மூச்சலைக் காற்று : உயிர்ப்பின் போது உயிர்ப்பீரலின் உள் நோக்கியும், புறநாடியும் போய் வரும் காற்று, சுவாசக் காற்று.

tilting disc : சாயும் வட்டு : நடு விலகிய கீல் உடைய வட்டத் தட்டு ஒரு பக்கத்தில் அழுத்தித் திறக்கிறது. செயற்கை இதய வால்வாகப் பயன்படும் கருவி.

timbre : ஒலிப்பண்பு : தொனியளவு, உரத்த ஒலியளவு பற்றி யல்லாமல், ஒலியின் குறிப்பிடத்தக்க தன்மை.

timolol : டிமோலால் : இரத்தக் கொதிப்பு, இதயத்தசைக் குரு திக்குறை, கண்நீர்மிகை அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பீட்டா தடுப்பி.

tincture : சாராயக் கரைசல் (டிங்சர்) : சாராயத்தில் கரைந்த கரை சல் (சாரம்).

tinea : படர்தாமரை நோய்; படை.

tinnitus : காதிரைச்சல்; போலிக் காதொலி; செவியிரைச்சல் : காது களில் முரலுதல், மணியடித்தல் அல்லது அடித்தல் போன்று ஒலி உண்டாதல். காதிற்குள் ரீங்கார ஒலி.

tintometer : தோல்செம்மைமானி : தோலில் உண்டாகும் செந்நிறத் தின் அளவை அளவிடும் ஒரு கருவி. இச்செந்நிறம் வீக்கத்திற்கு வழி வகுக்கும்.

tipped uterus : சாய்ந்த கருப்பை : சிறிது முன் பக்கம் சாயாமல் பின் பக்கம் சிறிது சாய்ந்துள்ள கருப்பை.

tissue : திசு (இழைமம்) : உடலின் ஒரு பகுதியாக அல்லது படல மாக அமைந்துள்ள உயிரணுக்களின் திரட்சி. எ-டு: தசைத் திசு; தோல் திசு; இணைப்புத் திசு நரம்புத் திசு.