பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1098

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tracheo...

1097

tram-tracking


trache o-oeophagela fistule : மூச்சுக் குழாய்-உணவுக் குழாய்ப் புரை.

tracheostomy : மூச்சுக்குழல் அறுவை; மூச்சுக்குழாய்த்திறப்பு; மூச்சுக்குழல் துளையீடு : மூச்சுக் குழாயின் முன்பக்கச் சுவரில் மூன்றாவது நான்காவது குருத்தெலும்பு வளையங்களில் வட்டத்துண்டுகளை அகற்றித் துளையிடுதல்.

tracheotomy : மூச்சுக்குழாய் துளைப்பு அறுவை : மூச்சுக்குழாயின் முன் பக்கச் சுவரில் மூன்றாவது, நான்காவது குருத்தெலும்பு வளையங்களில் செங்குத்தாகத் துளையிடுதல்.

trachoma : கண்ணிமை அரிப்பு (கண் அமரம்); இமை அரிப்பு : இமையிணைப்பு, விழி வெண்படலம், கண்ணிமைகள் ஆகியவற்றில் உண்டாகும் வீக்கம். இது ஒரு தொற்றுநோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த மருத்துவம் செய்யாவிட்டால், கண்பார்வை இழக்க நேரிடலாம்.

trachyphomia : குரல் கரகரப்பு.

tract : நீண்ட தடம் : நரம்புகள் போன்ற நீளமான உறுப்பின் இடைப்பு.

traction : இழுக்கை; இழுப்பு; தசைச் சுரிப்பு; இழுவை : தசைப் பரப்பிழுப்பு.

trachyphonia : குரல் கரகரப்பு.

traditional medicine : பரம்பரை மருத்துவம் : பரம்பரை பரம் பரையாக வாய்மொழி அல்லது எழுத்து மூலமாக தரப்படுவது. அனுபவ அறிவு மற்றும் கவனித்தறிவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் மொத்த அறிவு, பயிற்சியைக் கொண்டு உடல், மன, சமூக கோளாறுகளை நோயறிதல், நோய்த்தடுப்பு மற்றும் தீர்த்து வைத்தல்.

tradozone : டிராடோசோன் : மனக்கவலையுடன் தொடர்பு உடைய மனச்சோர்வின்போது பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.

tragus : காதுமூடி : செவியின் வெளித்து துளைக்கு முன்னால் உள்ள குருத்தெலும்புத் துருத்தம்.

trailing phenomenon : இழுத்துச் செல்லும் முறை : நகரும் பொருள்கள், ஒரு வரிசயைான தனித்தனியான தொடர்பற்ற உருவங்களாகத் தோன்றும் (பார்வை) உணர்வுப் பிறழ்வு. இது மாயத்தோற்ற முண்டாக்கும் மருந்துகளில் ஏற்படுவது.

trait : தனித்திறம்; தனிப்பண்பு; பண்பு : ஒரு முழுப்பண்பின் தனித்திறக்கூறு.

tram-tracking : வண்டித்தடதோற்றம் : சுவாசப் பாதை மூச்சுக்