பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1099

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

toxoplasmosis

1098

trachco...


toxoplasmosis : நச்சு ஊனீர் ஒட்டுண்ணிகள் : பிராணிகளிடமும் பறவைகளிடமும் பொதுவாகக் காணப்படும் நச்சு உயிர்ப்பொருள் ஒட்டுண்ணிகள். இவை, மனிதரையும் பீடிக்கும். இது மூளை வீக்கம், வலிப்புகள், மூளை நீர்க்கோவை, கண் நோய்கள் போன்றவற்றை உண்டாக்கும். இறுதியில் மரணம் விளைவிக்கும்.

TPN : முழுச்சிரைவழி உணவு ஊட்டம்.

trabecula : ஆதார நார்ப்பின்னல் : உறுப்பின் ஆதார பின்னல் வலை போல் நார்த்திசு உறுப் புத்திகவில் பின்னி வடிவைக் காக்கும்.

trabeculotomy : ஆதார நார்த்திசு அறுவை தடுப்புவெட்டு : கண்நோய் விறைப்பு நோயைக் குணப்படுத்த ஆதார நார்த்திக நாளத்தில் அறுவை மருந்து செய்தல்.

trace elements : சிற்றளவுத் தனிமங்கள் : திசுக்களில் வழக்கமாக மிகச் சிறிதளவு காணப்படும் உலோகங்கள் மற்றும் பிற தனிமங்கள். இயல்பான வளர்சிதை மாற்றத்திற்கு இவை இன்றியமையாதவை.

tracer : தடங்காண் மெய்யூடகம் : மனித உடம்புக்குள் செலுத்தப் பட்டுச் செல்வழி காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிமம்.

trachea : மூச்சுக் குழாய்; காற்றுக் குழல்; வளிக்குழல் : குரல்வளை யிலிருந்து மூச்சுக் குழாய்களுக்குச் செல்லும் சிலேட்டு மப்படல உயிர்ப்புக் குழாய்.

tracheate : மூச்சுக் குழலுள்ள.

tracheitis : மூச்சுக்குழல் அழற்சி; குரல்வளை அழற்சி; மூச்சுக்குழல் அழற்சி : மூச்சுக் குழலில் ஏற்படும் வீக்கம். தடுமன் போன்ற கிருமி நோய்களின் போது ஏற்படும்.

tracheobronchial : மூச்சுக் குழாய் மற்றும் பிரிவுக்குழாய்கள் சார்ந்த : முதன்மை மற்றும் பிரிவு மூச்சுக் குழாய்கள் இரண்டும் தொடர்புடைய.

tracheobronchitis : முதன்மை மற்றும் பிரிவு மூச்சுக் குழாய்கள் அழற்சி; மூச்சுக் குழாய் அழற்சி.

tracheocela : குரல்வளை சுரப்பி வீக்கம் : மூச்சுக் குழாய்த் திசு வீக்கம், விரிவு ஏற்படும் பகுதியில் தொங்கு தசையாக வீங்கும் கடுயைமான நோய்.

trachco-oesophageal : மூச்சு; பாறை-உணவுக் குழாய் சார்ந்த; மூச்சுக் குழாய் உண்குழல் : முச்சுக் குழல் உணவுக்குழாய் இரண்டும் தொடர்புடைய.