பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trance

1100

transdermal...


குழாய் வீக்கத்தில், தடித்த காற்று வழிச் சுவர்கள், இணையான, வளைந்த கோடுகள் போல் நெடுக்கில் எக்ஸ் கதிர்ப் படத்தில் தோன்றுவது.

trance : தன் மறதிநிலை; ஆவேசம் : தன்னை மறந்த கவர்ச்சிக் குட்பட்டு வசிய வெறி மயக்க நிலையில் இருத்தல்.

tranexamic acid : டிரானெக்சாமிக் அமிலம் : ஊனீர்க் கசிவைத் தடுக்கும் ஒரு மருந்து. இது அமினோகாப்ரோமிக் அமிலம் போன்றது.

tranquilizers : அமைதிப்படுத்தும் மருந்துகள்; சமனமூட்டும் மருந்துகள்; சாந்தமூட்டி; அமைதியூட்டி : மனஉளைச்சலைப் போக்கி அமைதியூட்டுகிற மருந்துகள். உளவியல் கோளாறுகளின் போது இவை பயன்படுத்தப் படுகின்றன. இவை அடிப்படையான நோயைக் குணப்படுத்துவ தில்லை. மாறாக, மனநிலையை மாற்றி நோயாளிகளுக்கு மன நிம்மதியைக் கொடுக்கின்றன.

transabdominal : வயிற்றூடு : வயிற்றுச் சுவர் ஊடாக.

transaminase : டிரேன்ஸமினேஸ் : ஒரு அமைனோ தொகுப்புகளை முன் நிலைக்கு மாற்ற செயலுக்கும் நொதி.

transcervical balloon tuboplasty : கருப்பைக் கழுத்தூடு பலூன் குழல் சீரறுவை : கருப்பைக் குழல்களின் உள்ளிடத்தை மீட்டுருவாக்க முயற்சிக்கும் செய்முறை.

Transcraniai Magnetic Stimulation (TMS) : மூளைத்திசுக் காந்தத் தூண்டல் : தற்காலிகமாகச் செயலிழந்த சிறிய முளைத் திசுப் பகுதிகளில் செயல்முறை நைவுப் புண்களை உண்டாக்குவதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் முறை. இந்த நைவுப் புண்களை, குறிப்பிட்ட நடத்தை முறை, உணர்ச்சிகள், உணர்வுகள், மனப்போக்குகள் ஆகியவற்றில் தொடர்புடைய மூளைப் பகுதிகளை அறுதியிடப் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதியைக் காந்தத்தின் மூலம் தூண்டுவதால் ஒரு குறிப்பிட்ட நரம்புச்செய்கை தூண்டப்படுகிறது. எ-டு: சுட்டு விரலை இவ் வாறு துடிக்கும்படி செய்யலாம். இத்தகைய காந்தத் தூண்டல் மூலம் மனப்போக்குக் கோளாறுகளைக் குணப்படுத்தலாம்.

transcription : படியெடுத்தல் : புரத உருவாக்கத்தின்போது உட்கருவிலுள்ள ஈரிழை டி.என்.ஏ. உருவிலிருந்து ஒரிழை ஆர்.என்.ஏ மூலக்கூறை சேர்த்துருவாக்கல்.

transdermal therapy : தோலூடு மருத்துவம் : நைட்ரோகிளிசரின்