பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transiliumination

1101

transplant


transillumination : ஒளிபாய்ச்சுதல்; ஒளி ஊடுருவல்; ஒளிபுகல்; ஊடு ஒளியூட்டம் : நோயினைக் கண்டறியும் நோக்கத்திற்காகப் பீனிசத்தினுள் ஒளியைப் பாய்ச்சுதல்.

translocation : புடைபெயர்வு; நிலைப்பெயர்வு : ஒரு நிறக் கோலிலுள்ள ஒரு பகுதியை அதே நிற்க்கோலின் வேறொரு பகுதிக்கு மாற்றுதல்.

translucent : அரை ஒளி ஊடுருவல்; ஒளிக்கசிவு : ஒளிக்கதிர் ஊடுருவி, உருக்காட்சி கடக்க விடாதிருக்கும் நிலை.

translumbar : முதுகெலும்பு வழி : முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி.

transmembrane protein : படல ஊடு புரதம் : குருதி நீர்ப்படலத்துடன் முழுவதுமாக ஒன்றிணைந்த புரதம்.

transmethylation : மேத்திலேற்றம் : அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு செய்முறை. இதில் ஒரு மெத்தில் ஒரு கூட்டுப் பொருளிலிருந்து இன்னொரு கூட்டுப் பொருளாக மாற்றப்படுகிறது.

transmigration : உயிரணு இடம் பெயர்வு : ஒரு சவ்வுப்படலத் தைக்கடந்து குறுக்கே ஒர் உயிரணு நாளத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாறுதல்.

transmission : அனுப்புதல் : தொற்று மூலம் அல்லது தேக்கத்திலிருந்து, தொற்று நோய்களில், ஒரு வாய்ப்பான ஏற்பிக்கு அனுப்புதல்.

transmissible : அனுப்பத்தக்க : ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்படும் தன்மை கொண்ட.

transmural : நாளச்சுவர் வழியே : ஒரு நீர்க்கட்டி உறுப்பு அல்லது நாளத்தின் சுவரின் வழியே.

transmutation : உயிர்வகை மாற்றம்; படிநிலை மாற்றம் : உயிரின் வகை மாற்றம்.

transnasal : மூக்கு வழியே.

transperitoneal : உதரப்பை வழியே.

transplacental : நச்சுக்கொடியூடு : நச்சுக் கொடியின் ஊடாக.

transplant : உறுப்புமாற்றம் : அறுவை மருத்துவம் மூலம் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருத்துதல்.