பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

travelier's...

1104

triamcinolone


traveller's diarrhoea : பயணிக் கழிச்சல் : ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது அல்லது மாசடைந்த உணவு அல்லது நீரை உண்பதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு.

treatment : மருத்துவச் சிகிச்சை; மருத்துவப் பண்டுவம்.

trematoda : ஒட்டுயிர்ப்புழு; தட்டைப்புழு; நங்கூரப்புழு : மனிதருக்கு நோய் உண்டு பண்ணும் நத்தைக் கிருமி போன்ற ஒட்டுயிர்ப் புழுக்களின் வகை.

tremor : சிறுநடுக்கம்; நடுக்கம் : உடல் துடிப்பதிர்வு அச்சத்தால் குரல் நடுக்கம் (அதிர்வு).

trench foot : கால் வீக்க நோய் : நெடுநேரம் ஈரத்தில் நிற்பதால் இரத்தவோட்டம் போதிஅளவு ஏற்படாமல் காலில் ஏற்படும் நோய்.

trephine : எலும்புத் துளைப்புக்குக் கருவி; திசு வெட்டுகருவி; திசுத் துரப்பணம் : விழி வெண்படலம், மண்டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்றுவதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளைடைய ஒரு கருவி.

trepopnoea : டிரெப்நோயியம் : நன்கு சாய்ந்த நிலைக்கு நோயாளி திரும்பும்போது, மூச்சுவிடுதல் மிகவும் செளகரியமாக இருக்கும் நிலை.

treponema, palladium : கிரந்திக் கிருமி : வெளுத்த திருகு நூல் கிருமி. கிரந்தி நோயை உண்டாக்கக்கூடியது.

treponen matosis : கிரந்திக் நோய் : கிரந்திக் கிருமியினால் உண்டாகும் நோய்கள்.

Treve's bloodless fold : டீவீரின் குருதியிலா மடிப்பு : பின் சிறு குடலின் குடலிணையத்துக் கெதிர் ஒர இறுதிப் பகுதியை, குடல்வாலின் குடலிணையத்துடன் இணைக்கும் வயிற்றுள்ளுறையின் கடைச்சிறு குடல் முட்டுக் குடல மடிப்பு. பிரிட்டீஷ் அறுவை மருத்துவர் ஃபிரெடரிக் ட்ரீவ்ஸ் பெயரால் அழைக்கப்படுவது.

triad : மூவியம் : மூன்று தனிப் பொருள்களின் தொகுதி. ஒரு நோயின் குணமறியத்தக்க நோய்க்குறி அல்லது உடல் நலக்கண்டறிதல்கள்.

triage : வகைப்பாடு : நெருக்கடியான சூழலில் நோயாளிகளை முந்துரிமை அடிப்படையில் வகைப்படுத்தும் முறை.

triamcinolone : டிரையாம்சினோலோன் : வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடைய ஒர் இயக்குநீர், ஊக்குபொருள். மின் பகுப்பு நடவடிக்கை மிகக் குறைவாக உடையது. இது புரதச் சிதைவைத் தூண்டும் தன்மையுடையதான தசையால், நலிவு உண்டாகும்.