பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trichoglossia

1106

trigger finger


trichoglossia : மயிர்நாக்கு : நாவில் காம்புக்கும் தடித்து, மயிர்நிறை நாவுத் தோற்றம்.

trichology : மயிரியல்; மயிர் முடியியல்.

trihomonacide : வெண்கசிவு நுண்ம எதிர்ப்பு மருந்து : பெண்களிடம் வெண்கசிவை உண்டாக்கும் ஒரணு ஒட்டுயிருக்கு எதிரான மருந்து.

trichomonas : வெண்கசிவு நுண்மம் : பெண்டிர் வெண்கசிவு உண்டு பண்ணும் ஒரணு ஒட்டுயிர். இது பெண்களின் சிறுநீர் ஒழுக்குக் குழாயிலும், யோனிக் குழாயிலும் நோய் உண்டாக்கிப் பெருமளவு வெள்ளைப்போக்கு ஏற்படுமாறு செய்கிறது.

trichomonas vaginalis : வெண்கசிவு நோய் : பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு நோய்.

trichomoniasis (seucorrhoe) : யோனிக் குழாய் அழற்சி : பெண் டிருக்கு வெள்ளைப் போக்கினால் யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம் ஆண்களுக்குச் சிறுநீர் ஒழுக்குக் குழாயில் இது ஏற்படும்.

trichonosis : மயிர்நோய் : மயிரின் ஒரு வியாதி.

trichophytobezoar : மயிரிழைப் பந்து : பிரணி மயிர் மற்றும் காயிழைகள் கொண்ட பந்து.

trichophytosis : முடிபடர் தாமரை : "டிரைக்கோஃபைட்டான்" என்ற பூஞ்சணத்தினால் உண்டாகும் நோய், எ-டு: முடியில் அல்லது தோலில் ஏற்படும் படர்தாமரை நோய்.

trichrome stain : முந்நிறக்கறை : நார்ப்புரதத்தை பச்சை நிறமாகவும் தசையை சிவப்பூதா மற்றும் மச்சையை பழுப்பு நிறமாக கறைப்படுத்தும், திசு நோயியலில் பயன்படும் சாயம்.

trichuris : உருண்டைப் புழு : சாட்டைப்புழு வகைகளில் ஒன்று.

trichuriasis : உருண்டைப் புழு நோய் : உருண்டைப் புழுவினால் உண்டாகும் குடல் நோய்.

tricuspid valve : மூவிதழ் ஓரதர்; மூவிதழ் : இதயத்தின் வலது துளைக்கும், கீழறைக்கும் இடையிலுள்ள மூவிதழ் ஒரதர்.

trigastric : மூவயிறு : மூன்று வயிற்று உடல் பகுதிகளையும் அவற்றுக்கிடையே இருதசை நாண்களையும் கொண்ட தசை.

trigeminal nerve : முத்திற உணர்வு நரம்பு; முக்கினை நரம்பு : இயக்கம், உணர்ச்சி, சுவை ஆகிய முன்றையும் தூண்டும் மண்டை நரம்பு.

trigger finger : வளைவு விரல்; சுக்கால் விரல் : விரல்கள் உதவியின்றி நீட்ட முடியாதபடி