பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trigger points

1107

triple antigen


எப்போதும் வளைந்திருத்தல். தசை நாண் கடினமாவதால் இது உண்டாகிறது.

'trigger points : தூண்டுமையப் புள்ளிகள் : தொடுவலி உணர்வு அதிகம் உள்ள தாவிடப்பகுதிகள்.

trigger thumb : விசைவில் பெருவிரல் : ஒரு ஒடுக்கமான நெடும் பெருவிரல் மடக்கியுடன் தொடர்புடைய, பிறவியிலேயே பெருவிரலின் நிலைத்த வளைவுக் குறை.

trigger zone : உணர்வுத் தூண்டு பகுதி : தலை, கழுத்திலுள்ள நரம்புகளை அடுத்துள்ள ஒரளவு எல்லையிடப்பட்ட பகுதிகளை மிக மெது தொடுதுண்டலாலும் மிகவும் நரம்பு வலியையும் உடன் திடீர் வலியையும் ஏற்படுத்தும்.

tri-iodo thyronine : கேடயச் சுரப்பி நீர்மம் : உடலின் வளர் சிதை மாற்றச் செய்முறையைப் பேணுவதில் பங்கு கொள்ளும் ஒரு கேடயச் சுரப்பி இயக்குநீர் (ஹார்மோன்).

trilene : டிரைலன் : டிரைக் குளோஎத்திலீன் என்ற நோவுத் தடை மருந்தின் வணிகப் பெயர்.

trimeprazine : டிரைமெப்பிராசின் : தோல் அரிப்பு நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து குழந்தைகளுக்கு அறுவை மருத்துவத்துக்குப் பின்பு பயன்படுத்தப்படுகிறது.

trimester : மும்மாதம்; மூன்று மாதக் காலம் : மூன்று மாதக் கால அளவு.

trimetaphan : டிரைமெட்டேஃபான் : குருதியற்ற கள அறுவை மருத்துவத்தில் இரத்த அழுத்தததைக குறைபபதற்கு நரமபு ஊசி மூலம் கொடுக்கப்படும் தடை மருந்து. இது குறுகிய நேரம் செயற்படக்கூடியது.

trimethoprim : டிரைம்ர்தோப்பிரிம் : ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து போலிக் அமிலங்களை பாக்டீரியாவுக்குத் தேவையான ஃபோலினிக் அமிலமாக மாற்றும் செரிமானப் பொருள் (என்சைம்) மீது தடை வினையை ஏற்படுத்துகிறது.

trimipramine : டிரைமிப்ராமின் : மனச்சோர்வினை நீக்கும் மருந்து. சிமிப்ராமினைப் போன்றது.

triostam : டிரையோஸ்டம் : உப்பின் மூலத் தனிமமாகிய சோடி யத்தின் (வெடியம்) வணிகப் பெயர்.

tripara : மூன்று பெற்ற கர்ப்ப : 20 வாரங்களுக்கு மேலும் நீண்ட கர்ப்ப நிலை மூன்று முறை அடைந்த பெண்.

triple antigen : முத்தடுப்புக் காப்பு மூலம் : தொண்டை அழற்சி. கக்குவான், நசிப்பிசிவு ஆகிய நோய்களுக்கு எதிரான காப்பு மூலம்.