பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

triple fusion

trochanters


triplefusion : மூன்று ஒட்டிணைப்பு : காலடியை நிலைப்படுத்த, பரடு, குதியென்பு, கனசதுரவென்புகளை ஒட்டியிணைப்பறுவை.

triplet : முப்பிறப்பிலொருவர் : நீண்ட கால கர்ப்பத்திற்குப் பிறகு ஒரே பிறப்பில் உருவான மூன்று பேரில் ஒருவர்.

triploid : மூவினக் கீற்றுத்தொகுதி : மூன்று இனக்கீற்றுத் தொகுதி களைக் கொண்டுள்ள.

triplopen : டிரிப்ளோப்பென் : கடுமையான உறுப்பெல்லை நோய்களுக்குப் பயன்படுத்தப் படும் கலவை மருந்து. இது, பெனித்தாமின் பெனிசிலின்-ஜி, புரோக்கைன், பெனிசிலின்-சி, சோடியம் பெனிசிலின்-ஜி ஆகியவை அடங்கியுள்ளன.

tris-hydroxylmethyl amino methane (THAM) : டிரிஹைட்ராக்சில்மெத்தில் அமினோமீத்தேன் : இரத்தத்தில் அளவுக்கு மேல் அமிலப் பொருள் இருப் பதைக் குணப்படுத்தப்படும் ஒரு காரப்பொருள்.

trismus : பூட்டுத்தாடை; வாய்க் கட்டு நோய்; தாவாய்ப் பூட்டு; தாடையிறுக்கு : வாயை மெல்லுவதற்கு உதவும் தசைகளில் ஏற்படும் கரிப்பு.

trisomy : மும்மடி இனக்கீற்று; முப்பிரி : பொதுவாக இரட்டைப் படியாக இருக்கக்கூடிய ஒர் இணைக்கீற்று மும்மடியாக இருத்தல். இதனால் இனக்கீற்றுகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகிறது. எ-டு: மனிதரிடம் இனக்கீற்று 47ஆக உயர்கிறது.

tritubation : அங்கத்தள்ளாட்டம் : நரம்பு எரிச்சல் காரணமாக ஏற்படும் அங்கத் தட்டுத் தடுமாற்றம்.

trocar : நீரெடுப்புக் கருவி; தூம்பு அணி : மகோதரம் போன்ற நோய்களில், உடலிலிருந்து நீர் எடுக்க உதவும் கருவி.

trochanters : பெருங்கால் எலும்புகள்; கரட்டுமுண்டு : காலின்