பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amphoteric

10

amylolysis


amphoteric : அமிலக் காரப்பண்பு.

amphotericin B : ஆம்போடெரிசின்-B.

ampiclox : ஆம்பிக்ளாக்ஸ் : ஆம்பிசிலின், கிளாக்சாசிலின் ஆகிய இரண்டும் கலந்த கலவையின் வணிகப் பெயர்.

amplification : ஒலி அலை பெருக்கல்; அலை பெருக்கல்.

amplitude : அலைவீச்சு; விரியளவு; வீச்சு.

ampoule : மருந்துச் சிமிழ் :தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.

ampulla : குழாய்க் குடுவை; குடுவை : உடலிலுள்ள குழாய் அல்லது பையின் விரிந்த கடைப்பகுதி.

amputation : உறுப்பு நீக்கம்; அங்க வெட்டு; துண்டித்தல் :உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு.

amputation sign : வெட்டு நீக்கத் தடயம்.

amputee : உறுப்பு நீக்கப்பட்டவர்.

amusia : இசை உணர்வின்மை.

amylase : அமிலேஸ் : மாச்சத்துப் பொருள்களை சர்க்கரையாக மாற்றக்கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

amyelinic : மயலின் அற்ற நரம்பு காப்புறை அற்ற.

amyl : அம்யல் : நைட்ரேட் வகையைச் சேர்ந்த இரத்தநாள இதயவலிக்குத் (நெஞ்சு வலி) தரப்படும் மருந்து. முகர்தல் மூலமாகச் செலுத்தப்படும் மருந்து.

amylnitrite : அமில்நைட்ரைட் : விரைந்து ஆவியாகக் கூடியதாகவும், துரிதமாகச் செயற்படத்தக்கதாகவும் உள்ள குருதி நாள விரிவகற்சி மருந்து. இதயப் பாதிப்பினால் ஏற்படும் தொண்டையடைப்பைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

amylobarbitone : அமிலோபார்பிட்டோன் : நடுத்தரமான செறிவினை நீட்சியுடைய 'பார்பிட்டுரேட்' என்னும் தூக்க மருந்து.

amyloid : அமிலாய்ட் : மாச்சத்து போன்ற பொருள். 'அமிலாய்டா சிஸ்' எனப்படும் அமிலாய்ட் திரட்சிக் கோளாறுகளில் இந்தச் சிக்கலான பொருள் அளவுக்கு மேல் திரள்கிறது.

amyloidosis : அமிலாய்ட் திரட்சி நோய் : ஏதேனும் உறுப்பில், குறிப்பாக துரையீரலிலும், சிறு நீரகத்திலும் 'அமிலாய்ட்' எனப்படும் மாச்சத்து போன்ற பொருள் படிதல்.

amylolysis : மாச்சத்துச் செரிமானம் : மாச்சத்துப் பொருள்கள் செரிமானமாதல்.