பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

troche

1109

trough


உச்சிப் பகுதியின் புறத்தே தொட்டு உணரகூடிய எடுப்பான இரு எலும்பான இரு எலும்புப் பகுதிகள், காலை வெளிப்புறமாகத் திருப்புவதற்கும், காலை பக்கவாட்டில் திருப்புவதற்கும் பயன்படும் தசைகளில் சில இவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளன. சிறு கால் எலும்புத் தசைகள், முழங்காலை மேல் நோக்கித் தூக்க உதவுகின்றன.

troche : கரையுமருந்து : வாயில் கரையும் பொழுது மருந்துப் பொருள் வெளிப்படுகிறது.

trochlear : கப்பிசார் : 1.கப்பியென்பு தொடர்பான, 2. கப்பியென்பு தன்மையுடைய.

trochlea : கப்பி உறுப்பு : கட்டமைப்பிலும், செயல்முறையிலும் ஒரு கப்பி போன்ற உறுப்பு.

trophic : வளம் ஊட்டம்; வளப்ப : நரம்பு வகையில் உணவூட்டத் தோடுகூடிய வளர்ச்சிவூட்டம் சாாந்த.

trophoblast : ஊண் வளர் அரும்பணு : அரும்பணு நீர்க்கட்டியின் வெளிப்பக்கமுள்ள கரு வெளி மேற்பட்டைத் திசுவின் ஒரு அடுக்கு, அது நச்சுக் கொடியாகவும் பனிக்குடப் பையாகவும் வளருகிறது.

trophoblastic tissue : சூல் முட்டைத்திசு : சூல்முட்டையில் பதிந்துள்ள உயிரணுக்கள். இவை சூல் முட்டைக்கு உணவூட்டம் அளிக்கின்றன.

trophoblastic tumour : வளர் அரும்பணுக்கட்டி : வளர் அரும் பணுவிலிருந்து உருவாகும் இயல்புமாறிய வளர்ச்சி.

trophoneurosis : தேய்மானம்; மிகுவளர்ச்சி போன்ற கோளாறுகள் : நரம்புக் கோளாறினால் உண்டாகும் வளர்ச்சிக் கோளாறுகள்.

trophozoite : வளர் அணூயிர் : ஓரணு ஒட்டுண்ணியின் வளர்ச்சி நிலை.

tropical : வெப்பப்பிரதேச : முக்கியமாக வெப்பச் சூழ்நிலையில் வளர்கிற.

tropicamide : டிரோபிக்காமைடு : கண்மணி அழற்சியைக் குணப் படுத்தக்கூடிய ஒரு செயற்கை மருந்து.

tropomyosin : ட்ரோப்போமைசின் : ஆக்டின் இழையைச் சுற்றியுள்ள இயங்கு மற்றும் இதயத் தசைப்புரதம்.

troponin : ட்ரோப்போனின் : தசையிழைகளில் உள்ள தடுக்கும் புரதம்.

trough : தொட்டி : 1. நெடுக்கான ஆழம் குறைந்த பள்ளம். 2. பக்க விளைவுகள் உண்டாகும்