பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

troxerutin

1110

t-test


அளவு நெடுங்காலத்துக்கு செலுத்தப்படும்.

troxerutin : டிராக்செருட்டின் : தந்துகி நொய்மையைக் குறைத்து, திசுப்பரவலை அதிகரிக்கும் ஒரு பொருள். இதன்மூலம் சிரைக் குருதியிலுள்ள இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது.

trunk : முண்டப்பகுதி : 1. தலை, உறுப்புகள் தவிர்த்த உடல்பகுதி 2. நரம்பு, நிண, இரத்த நாளத்தின் முக்கிய தண்டுப்பகுதி.

truss : திரள்கட்டு : ஒரு பிதுக்கத்தை சரிசெய்த பிறகு வயிற்றுக் குழிவறைக்குள் நிலைபெறச் செய்ய பயன்படும் ஒரு (மீள் தகவு) நெகிழ்க் கட்டமைப்பு.

trychlorethylene : நோவுத் தடைமருந்து.

trypanosoma : உறக்க நோய்க் கிருமி; தூக்க நோய்க் கிருமி : உறக்க நோய் போன்றவற்றை உண்டு பண்ணும் ஒரணுக் குருதி ஒட்டுயிர்.

trypanosomiasis : உறக்க நோய்; தூக்க நோய் : உறக்க நோய் ஒட்டுயிரினால் உண்டாகும் உறக்க நோய் மேற்கு ஆஃப்ரிக்காவில் இந்நோய் பெருமளவில் காணப்படுகிறது. 'டெட்சே' எனப்படும் கொடிய நச்சுண்ணி யினால் இது ஏற்படுகிறது.

tryparsamide : டிரைப்பார்சாமைடு : உறக்க நோயைக் குணப்படுத்தும் கரிம ஆர்சனிக் கூட்டுப் பொருள். இது நரம்பு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

trypsin : கணைய நீர் நொதி : கணையச் சுரப்பி நீரின் கரு நிலை நொதி, ஒரு செரிமானப் பொருள். செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

tryptizo : டிரிப்டிசோல் : வயது வந்தவர்கள் உறக்கத்தில் சிறுநீர் கழிவதைத் தடுக்கப் பயன்படுத் தப்படும் அமிட்ரிட்ரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

tryptophan : டிரிப்டோஃபான் : உடல் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. நியாசின் பற்றாக் குறையை ஈடு செய்ய இது போதிய அளவு பேணி வரப்படவேண்டும்.

tsetse fly : குருதி உறிஞ்சு நச்சுண்ணி ஈ : ஆஃப்ரிக்காக் கண்டத்தில் கடித்து இரத்தம் உறிஞ்சி மரணம் விளைவிக்கும் கொடிய நச்சுண்ணி ஈ வகை (செட்சி ஈ).

t-test : டீ சோதனை : ஒன்று அல்லது இரண்டு மாதிரிகள் சிறிதாயிருக்கும்போது இரண்டு மக்கள் தொகைகளுக்குள்ள இரண்டு வகை கண்டுபிடிப்பு.