பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

t-tube

1111

tuberculosis


களை ஒப்பிட்டு, முக்கியத்துவத்தைக் கண்டறியும் புள்ளி விவர முறை.

t-tube : 'டீ' குழாய் : பித்தப் பையை நீக்கிய பிறகு, பித்த நாளத்தை வடிப்பதற்கும் தோதுவாக பித்த நாளத்துக்குள் செருகப்படும் கருவி.

tubal : குழாய் சார்ந்த; குழாயில்; குழலுள் : ஒரு குழாய் தொடர்பு உடைய.

tubal abortion : கருக்குழல் கருச்சிதைவு; குழலுள் சிதைவு : கருக்குழலில் கருச் சிதைவு செய்தல்.

tubal pregnancy : கருக்குழல் கர்ப்பம்.

tubar : குழாய் வடிவு; மேடு; வீக்கம்.

tubauterina : கருக்குழாய்.

tubectomy : குழலெடுப்பு; குழாய் நீக்கம்.

tube feeding : குழல்வழி உணவூட்டல் : மூக்கிரைப்பைக் குழல் வழியாக உணவும் நீரும் இரைப்பைக்குள் செலுத்தல்.

tubercle : கழலை; எலும்புப் புடைப்பு; நுண்முண்டு : எலும்பில் ஏற்படும் வட்டமான சிறு புடைப்பு கழலை, கழலைப்புற்று.

tubercularization : காசநோய்க்குள்ளாதல் : எலும்புருக்கி நோய்க்கு உள்ளாதல்.

tuberculation : எலும்பு புடைப்பாக்கம் : எலும்பு புடைப்புறுதல்; கழலையாக்கம்.

tuberculide/tuberculid : காச நோய் நைவுப்புண்; காசநோய்; தோல் கட்டி; தோல் காசநோய் : காச நோயின் ஒரு சிறிய நிணநீர் இடமாற்ற வெளிப் பாடு. இதனால் தோல் நைவுப் புண் உண்டாகிறது.

tuberculin : காசநோய்க் கிருமிக் குழம்பு : காசநோய்க் கிருமியின் வலிமை நீக்கிய ஒரு குழம்பு ஒருவர் முன்னர் காசநோய்க் கிருமியினால் பாதிக்கப்பட்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய இது பயன்படுத்தப் படுகிறது. இதனை தோலுக்குள் ஊசி மூலம் செலுத்தி, அதன் எதிர்வினைகளைக் கண்டறிந்து கொள்ளப்படுகிறது. 48-72 மணி நேரத்திற்குள் எதிர்வினை எதுவும் இல்லையெனில் முந்திய பீடிப்பில்லை என்று அறியலாம்.

tuberculoid : கழலை போன்ற : எலும்புப்புடைப்பு போன்ற.

tuberculoma : காசநோய்க் கட்டி; உறைகட்டி : உறைந்தது போன்ற கட்டி இது வடிவளவு பெரிதாக இருக்குமாயின் அது கழலையாக இருக்கும்.

tuberculosis : காசநோய்; சய நோய்; எலும்புருக்கி நோய் : காச