பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

turner syndrome

1114

tympanitis


turner syndrome : பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை : பெண்களின் பிறப்புறுப்புகள் வளச்சியடையாமல் குழந்தைப் பருவத்தில் இருந்தது போலவே இருத்தல். இது ஒரு மரபணுக் கோளாறு. இந்நோய் உள்ளவர்களுக்குக் கரு உயிர்ம உயிரணுக்கள் அடியோடு இருப்பதில்லை. இவர்கள் பூப்பெய்துவதில்லை. இவர்களுக்கு X என்ற ஒற்றை இனக்கீற்று மட்டுமே இருக்கும். இதனால் இவர்கள் உடலில் உயிரணுக்களில் 45 இனக்கீற்றுகள் மட்டுமே காணப்படும்.

turns : மாதவிடாய்.

tussis : இருமல்.

tussive : இருமல் சார்ந்த.

Tween : 'டி'வீன் : பாலி ஆக்ஸி எதிலீன் சார்பிட்டானின் கொழுப் பமில எஸ்டர்கள் கொண்ட இயனியல்லாத சலவைப்பொருள்.

twin : இரட்யைர் : ஒரு பிறப்பில் பிறந்த இரண்டு பிறவிகளில் ஒருவர்.

twitch : திடீர் தசை இழுப்பு : இயக்குதசையின் சிறிது நேர துடிப்பு.

two point discrimination : இரு புள்ளி வேறுபட்டறிவு : நெருக்கமாக உள்ள இரு தொடு உணர்வுகளை வேறுபடுத்தி அறியும் திறன்.

tylosis : கண்கட்டி; கரட்டுமை : கண்ணிர்ப்பை வீக்கம்.

tyloxapol : டைலோக்சாப்போல் : மூச்சுக் குழாய்ச் சவ்வின் கன அளவை அதிகரித்து, குழைமத் திறனைக் குறைக்கிற ஒரு மருந்து.

tympan : இழுவைத்தசைநார்.

tympanal organ : செவிப்பாறை உறுப்புகள்.

tympanectomy : செவிப்பறை நீக்கம் : செவிப்பறைப் படலத்தை வெட்டியெடுத்தல்.

tympanic : இடைச்செவி சார்ந்த பறை : புறச்செவிக்கும் அகச் செவிக்கும் இடைப்பட்ட பகுதியான செவிப்பறைச் சவ்வு தொடர்பான.

tympanic membrane : செவிப்பறைச் சவ்வு; பறைச் சவ்வு.

tympanites (tympanism) : வயிற்று உப்புசம்; குடல் வாயு வீக்கம் : குடலுக்குள் காற்றால் ஏற்படும் அடிவயிற்று வீக்கம்.

tympanitic : குடல் வாயு வீக்கம் சார்ந்த.

tympanitis : செவிப்பறை சவ்வழற்சி.

tympanitis : செவிப்பறை அழற்சி; இழைச் செவியழற்சி; பறை யழற்சி : புறச்செவிக்கும் அகச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி