பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ultrafilter

1119

ultrastructure


ultrafilter : மீவடிகட்டி : தொங்கும் கள்களை செல்லவிடாமல் தடுக்கும் அளவு சிறு நுண் துளைகள் கொண்ட சவ்வினைக் கொண்ட, கரைசல்களை தூய்மைப்படுத்தும் வடி கட்டி.

ultrafiltrate : மீவடிபொருள் : மீவடிப்பியின் வழியாகச் சென்று வந்த நீர்மம்.

ultrafiltration : மீவடிகட்டல் : மிக நுண்துகள்களை நீக்க வல்ல மீவடிப்பி மூலமாக வடிகட்டல்.

ultraalente : மீநேர இயக்க : லென்டே இன்சுலினை விட அதிகமாக 24 மணி நேரம் செயல்படும் இன்சுலின்.

ultramicroscope : மீநுண்நோக்கி : ஒரு சாதாரண நுண்நோக்கியின் மூலம் பார்க்க முடியாத அளவு மிகச்சிறிய பொருட்களின் நிலையை கண்டுபிடிக்க், சிதறல் தத்துவத்தைப் பயன்படுத்தும் கருவி.

ultrasonic : ஒலிகடந்த அதிர்வலை; மீயொலி செவியுணரா ஒலி : ஒலியைவிட விரைந்து செல்லும் வேகம், பல்வேறு இயற்பியல் பண்புகளையுடைய அடுத்தடுத்த திசுக்களிடையிலான எல்லைகளை இந்த ஒலி கடக்கும்போது ஏற்படும் எதிரொலிகளைக் கொண்டு நோய் பற்றிய தகவல்கள் அறியப் படுகின்றன.

ultrasonication : மீஒலிச்சிதறல் : நுண்ணுயிர்கள் உட்பட்ட திடப் பொருட்களை உருக்குலைய மீஒலியைப் பயன்படுத்துதல்.

ultrasonogram : மீஒலிப்படம் : மீஒலி வரைவின் மூலம் பெறப்படும் உருவடிவம்.

ultrasonograph : மீஒலிவரைவி : ஒலியலைகளை ஒரு உறுப்பை நோக்கிச் செலுத்த, அது அவ்வலைகளை எதிரொலிக்க, அவற்றை ஒரு ஒளிர் விடும் திரையில் உருப்பதிவுகளாகக் காட்டும் கருவி.

ultrasonography : மீயொலி வரைவு; கதழ் ஒலி உருக்காட்சி : செவிப்புலன் கடந்த ஒலியினைப் பயன்படுத்தி கண்ணுக்குப் புலனாகா உருக்காட்சிகளை உருவாக்கக் கட்டுப்படுத்திய இந்த ஒலிக்கற்றை உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அதனால் உண்டாகும் எதிரொலிகளைக் கொண்டு உடலின் பல்வேறு கட்டமைப்புகள் பற்றிய மின்னணுவியல் உருக்காட்சி உருவாக்கப்படுகிறது.

ultrasound : கதழ் ஒலி : செவிப்புலன் கடந்த ஒலி. இது 20,000 Hz அலைவெண் உடையது. மனிதர் செவியினால் கேட்க முடியாதது.

ultrastructure : நுண்கட்டமைப்பு : மின்னணு உருப்பெருக்கி மூலம்