பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ultraviolet

1120

uncipressure


பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு.

ultraviolet : மீஊதா : நிறப்பட்டையில் தென்படும் ஊதாப் பகுதிக்கப்பால்.

ultravirus : நுண் வைரஸ் : நுண்ணோக்கியால் காணப்பட முடியாத அளவு சிறிய, மிக நுண்ணிய வடிப்பிகள் ஊடே செல்லக் கூடிய வைரஸ்.

ululation : அலறல் : ஹிஸ்டீரியா நோயாளிகளில் மிகவும் சத்தம் போட்டுக் கதறல்.

umbilical : தொப்புள் சார்ந்த : தொப்புள் கொடி அல்லது தொப்புள் தொடர்பான.

umbilical cord : உந்திக் கொடி; தொப்பூழ்க் கொடி; தொப்பூழ் நாளம் : தொப்பூழ்க்கொடி சூல் முட்டையுடன் நச்சுக்கொடியை இணைக்கும் உந்தி நரம்பு.

umbilicated : மையக்குழி : ஒரு மையப் பள்ளம் எ-டு: அம்மைத் தழும்பின் மையப் பள்ளம்.

umbilication : உந்திக்குழிவு : தொப்புள் போன்று தோற்றமளிக்கும் குழி அல்லது பள்ளம்.

umbilicus : தொப்புள் குழி; தொப்புள்; உந்தி :' கொப்பூழ்க்குழி, உந்தி, குழந்தை பிறந்தபின் தொப்புள் கொடியை அகற்றியபிறகு அடிவயிற்றில் இருக்கும் குழிவு.

umbo : குமிழ்முனை : 1. ஒரு உருண்ட மேடு, 2. செவிப்பறையின் உள்பரப்பில் நடுவில் ஒரு சிறுமேடு.

umbonate : குமிழ்முனைசார்ந்த : குமிழ் போன்ற, பொத்தான் போன்ற மேடான நடுப்பகுதி.

umberlla filter : குடைவடிப்பி : குருதிக் கட்டித் துகள் பரவாம லிருக்க, கீழ்ப்பெருஞ்சிறையில் அந்த இடத்தில் வைக்கப்படும் துருவிலா இரும்பு வடிகட்டி.

unciform : கொக்கியுரு; கொக்கி : கொக்கி வடிவம் கொண்டு. சுத்தியெலும்பு மணிக்கட்டின் கீழ்வரிசை உள்பக்கமாயுள்ள சுத்த வடிவ எலும்பு.

uncinaria : கொக்கிப் புழு : கொக்கி போன்ற அமைப்பு கொண்ட நீள்உருள் வடிவப் புழு,

uncinariasis : கொக்கிப் புழுத் தொற்று : குடலில் கொக்கிப்புழு பற்றுகை ஆங்கிலோஸ்டோமா புழுப்பற்றுகை, கொக்கிப்புழு நோய்.

uncinate : கொக்கியுரு : 1. கொக்கி வடிவ அல்லது கொக்கி கொண்ட 2. கொக்கி உரு.

uncipressure : கொக்கியழுத்தம் : இரத்த ஒழுக்கை நிறுத்தி, ஒரு