பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

undernourished

1122

unicellular


undernourished : ஊட்டக் குறைவான : இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான உணவை அளிக்காதிருத்தல்.

undernutrition : ஊட்டக்குறைவு.

undine : கண்ணீரூட்டிக்குடுவை; தூம்புக்குடுவை : கண்களைக் கழுவுவதற்குப் பயன்படும் ஒரு சிறிய மெல்லிய கண்ணாடிக் குடுவை.

understain : குறைசாயமேற்றல் : வழக்கத்தைவிடக் குறைவான அளவு சாயமேற்றல்.

undertoe : கீழ்பெருவிரல் : கால் பெருவிரல் மற்ற கால் விரல்களும் அடியில் இடமமைந்து இருப்பது.

underweight : குறைவெடை : உடல் எடை இயல்பை விட பத்து சதவீதம் குறைவாயுள்ள நிலை.

undifferentiated : வேறுபடுத்தப்படாத : புது வளர்ச்சி (புற்றுத்) திசுவின் உயிரணு வரிசைய மைப்பைக் குறிக்கப் பயன்படும் சொல், அடையாளம் காண முடியாத பாங்கு.

undine : (நீர்க்) குடுவை : கண்களை கழுவப் பயன்படுத்தப்படும் ஒரு சிறு கண்ணாடிக் குடுவை.

undoing : இல்லாமல் செய்வது : பயமுறுத்தும் ஆட்டிப்படைக்கும். எண்ணம் அல்லது தூண்டுதல் காரணமாக, நோயாளி அறிவுக் கொவ்வாமல் சில விளைவுகளை தடுப்பதாக அல்லது இல்லாமல் செய்வதான முயற்சியில் மேற்கொள்ளும் ஒரு கட்டுப்படுத்த முடியாத சொல்.

unguis : (விரல்)நகம் : 1. கை விரல் நகம் அல்லது கால் விரல் நகம், 2. கண்ணிர் எலும்பு, 3. பக்க நீரறையின் பின் கொம்புத் தளத்தில் வெண்மேடு.

ungula : குளம்பு : கருப்பையில் இருந்து செத்த முதிர்கருவை வெளியிலெடுக்கும் கருவி. ஒரு பிராணியின் குளம்பு.

unhappy gut : மகிழ்விலா அழும் குடல் : செயலிழந்த இரைப்பைக் குடல் மென்தசை காரணமாக உண்டாகும் இயக்கக் குடலழற்சி.

uniarticular : ஒரு மூட்டு (சார்) : ஒரு மூட்டு தொடர்பான.

uniaxial : ஒரு அச்சுள்ள : 1. ஒரு அச்சு மட்டும் கொண்ட 2. அச்சுத் திசையில் வளர்ச்சி.

unicameral : ஒரு குழிய : ஒரு குழிவறை மட்டும் கொண்ட.

unicellular : ஒற்றை உயிரணு வுடைய; ஓரணு உயிரி : ஒரே யொரு உயிரணுவை மட்டும் கொண்டுள்ள.