பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unstriated

1124

uraemia


முள்ள குருதிக்குறை நெஞ்சு வலி. இதயமின் வரைபடத்தில் ST.T அலை கீழிறங்கியிருக்கும் பெரும்பாலும் இதயக்தமனி கரிப்பு பெரும்பாலும் காரண மாக உள்ளது. திசு வழிவுக்கு முந்திய வலி எனவும் அழைக்கப்படுகிறது.

unstriated : வரியிலா : மென்தசையிழை போன்ற வரிகளில்லாத.

Unverricht disease : அன்வெர்ரிச்ட் நோய் : ஜெர்மன் மருத்துவர் ஹெயின்ரிச் அன்வெர்ரிச்ட் பெயரால் அழைக்கப்படும் தசைச் சுரிப்பு வலிப்பு நோயுடன்கூடிய ஒரு மரபணுக் கோளாறு.

upper airway obstruction : மேல் மூச்சுப் பாதை அடைப்பு : தொற்றுகள், திடீர் நீர்வீக்கம் அல்லது வேற்றுப் பொருள் உள்ளிழுத்தல் காரணமாக மூச்சுப் பாதையின் மேல் பகுதியில் ஏற்படும் அடைப்பு. குரல்வளைக் கோளாறுகள், மூச்சுக் குழாய்குறுக்கம் மற்றும் காரணமாக இந்த நிலை மெதுவாக ஏற்படலாம்.

upper motor neurone : மேல் செயல் நரம்பணு : செயல் நரம்புயரணு.

upper respiratory tract infections (URTI) : மேல் மூச்சுக்குழாய் நோய்கள் : எல்லா வயதுப் பிரிவினருக்கும் பொதுவாக நோய் பீடிக்கும் பகுதி மேல் மூச்சுக் குழாயாகும். மூக்கு அழற்சி. காற்றறை அழற்சி ஆகியவை இந்நோய்களில் முக்கியமானவை. தொண்டைச் சதை அழற்சி, மூக்கடிச் சதை அழற்சி, தொண்டை அழற்சி, செவி அழற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

upside-down stomach : தலைகீழ் இரைப்பை : உணவுக்குழல் பக்கத்துளை பிதுக்கத்தின் ஒரு அரிய வகையில் இரைப்பை முழுவதும் மார்புக் குழிவறைக்குள் இருத்தல்.

urachal : தொப்புள் குழிப்புரை வழி : சிறுநீர்ப்பை தொப்புள் ஊடே புரைவழி வெளித்திறந்து சிறுநீரை வெளிப்படுத்தல்.

urachus : தொப்புள் குழித்தண்டு : சூல் முட்டையில் தொப்புள் குழியுடன் சவ்வுப்பையை இணைக்கும் தண்டு போன்ற அமைப்பு.

uraemia : கறுப்புக் குருதிச் சோகை; யூரியாக் குருதி : சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற்