பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uragogue

1025

urease


படுகிறது. இந்நோய் முற்றிய நிலையில் குமட்டல், வாந்தி, தலைவலி, விக்கல், உடல் நலிவு, கண்பார்வை மங்குதல், வலிப்புகள், மயக்கம் உண்டாகும்.

uragogue : சிறுநீர்ப்பெருக்கி : சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் பொருள், நீர்ப்பெருக்கி.

uranostaphyloplasty : அண்ணச் சீரறுவை : மெல்லண்ணம் மற்றும் (வல்)அண்ண குறைகளை அறுவை மருத்துவம் மூலம் சரிசெய்தல்.

urate : யூரிக் அமில உப்பு : யூரிக் அமில உப்புகளில் ஒன்று. இது இரத்தத்திலும், சிறுநீரிலும் இருக்கும்.

uratosis : திசுயூரேட்பொதிவு : திசுக்களில் படிக யூரேட்டுகளைப் பொதித்தல்.

uraturia : மிகைச் சிறுநீர் யூரிக் உப்பு : சிறுநீரில் யூரிக் அமில உப்பு அளவுக்கு அதிகமாக இருத்தல்.

Urbach-Oppenheim disease : அர்பேச் ஒப்பென்ஹீம் நோய் : அமெரிக்க தோல் நோய் மருத்துவர்கள் எரிக் அர்பேச் மற்றும் மாரிஸ் ஒப்பென்ஹீம் விவரித்த, நீரிழிவு நோயாளிகளில் இணைப்பு, நெகிழ் திகத்தோல் நோய்.

urbanisation : நகரமயமாக்கல் : வேலை வாய்ப்புகள் மிக நல்ல வாழ்க்கை முறைகள் பால்ஈர்ப்பு மற்றும் சமூக சேவைப்பணிகள் கிடைப்பதால் மக்கள் நகரங்களில் சென்று குடியேறுதல்.

ur-defenses : காப்பு நம்பிக்கைகள் : தங்கள் உடல் நிலைத் தன்மை, மற்றவர்கள் நண்பர்களாக் கூடியவர்களே என்ற கனவெண்ணம், தெய்வீக முறைமையில் நம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளை உளத்தில் கொண்டு மனிதர்கள் மனக் குலைவுகளிலிருந்தும் மனக் காயங்களிலிருந்தும் காத்தல்.

urea : யூரியா (மூத்திரை) : பால் உண்ணி விலங்குகளின் சிறுநீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியாஃபார்பால்டிஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாராகிறது. இது புரத வளர்சிதை மாற்றத்தின் இறுதி விளை பொருளாக உண்டாகி, சிறு நீருடன் வெளியேறுகிறது.

ureaphil : யூரியாஃபில் : பெரு மூளை இழைம அழற்சியில் யூரியா உறிஞ்சிப் பொருளின் வணிகப் பெயர். குருதியிலிருந்து யூரியாவை அகற்றப் பயன்படும்.

urease : யூரியேஸ் : யூரியாவை அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகப்பிளக்க உதவும் நொதி. படிக