பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uretero...

1127

urethrocela


ureteropelvioplasty : சிறுநீரக வட்டில் சிறுநீர்க்குழல் சீரிணைப்பு : சிறுநீரக வட்டிலும் சிறுநீர்க் குழலும் சந்திக்கும்மிட மறுசீரறுவை.

ureteroplasty : சிறுநீர்க்குழல் மறுசீர் அறுவை : சிறுநீர்க்குழலை மறுசீரமைக்கும் அறுவை.

ureteropyelitis : சிறுநீரக வட்டில் சிறுநீர்க்குழலழற்சி : சிறுநீரக வட்டில் மற்றும் சிறுநீர்க் குழல் அழற்சி.

ureteropyosis : சீழ்ச்சிறுநீர்க்குழல் : சிறுநீர்க்குழலழற்சியால் சீழ்கோத்தல்.

ureterorenoscope : சிறுநீரக நீர்க்குழல் உள்நோக்கி : சிறு நீரகத்தையும் சிறுநீர்க்குழலையும் பார்த்தறியப் பயன்படும் ஒரு ஒளியிழை உள்நோக்கி.

ureterorenoscopy : சிறுநீரக நீர்க்குழல் உள்நோக்கல் : சிறு நீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் உள்ளமைப்பை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் சிறுநீரக சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு பார்த்தறிந்து, திசு சோதனை செய்தல் அல்லது கற்களை நொறுக்குதல் அல்லது வெளியிலெடுத்தல்.

ureteroscope : சிறுநீர்க்குழல் உள்நோக்கி : சிறுநீர்க்குழலை கண்டறியப் பயன்படும் ஒளியிழை உள்நோக்கி.

ureteroscopy : சிறுநீர்க்குழல் உள் நோக்கல் : சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு, சிறு நீர்க்குழலை பரிசோதித்தல்.

ureterostoma : சிறுநீர்க்குழல் துளை : சிறுநீர்க்குழல், சிறுநீர்ப் பைக்குள் நுழையுமிடத்துளை.

ureterostomy : முத்திரக்கசிவு குழல் அறுவை : முத்திரக்கசிவு நாளம் சிறுநீரை வெளியேற்றுவதற்காக ஒரு நிரந்தரமான குழல் அமைத்தல்.

urethra : சிறுநீர்ப்புறவழி; சிறுநீர் வடிகுழாய் : மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நாளம். பெண்களுக்கு இதன் நீளம் 25-40 மி.மீ. அளவு இருக்கும். ஆண்களுக்கு 250 செமீ நீளமிருக்கும்.

urethral syndrome : சிறுநீர்க் குழாய் நோய் : சிறுநீர் ஒழுக்குக் குழாயினையும், அதனை அடுத்துள்ள சுரப்பிகளையும் பீடிக்கும் நோய்.

urethritis : சிறுநீர் வடிகுழாய் அழற்சி; மூத்திரக்குழாய் அழற்சி : சிறுநீர்ப்புறவழி வீக்கம்.

urethro : சிறுநீர்த்தாரை சார்ந்த : சிறுநீர்த்தாரை தொடர்பான கூட்டுச்சொல்.

urethrocela : மகளிர் சிறுநீர்ப்பை அழற்சி; நெகிழ்ச்சிநழுவல் :