பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anaemia, nutritional

112

anaesthetic


anaemia, nutritional : ஊட்டக்குறை சோகை.

anaemia, secondary : உதிரிச் சோகை; சார்புச்சோகை.

anaemic : சோகையான.

anaerobe : ஆக்சிஜன் இன்றி வாழும் உயிர்; அல்வளி உயிரி : நேரடியாக ஆக்சிஜன் இல்லாமல் வாழத்தக்க உயிர் வகை.

amaerobic: அல்வளி உயிரிய; காற்றேற்கா.

anaerobic respiration : அல் ஆக்சிஜன் மூச்சுவிடல் : ஆக்சிஜன் குறைவாக இருக்கும் போதே மூச்சு விடுதல். முதிர் கரு இவ்வாறு சுவாசிக்கிறது.

anaerobiosis : பிராணவாயு அறவே அற்ற இடத்தில் உள்ள வாழ்க்கை முறை.

anaerogenic : குறைந்த அளவில் வாயுவை உற்பத்தி செய்கின்ற; அறவே வாயுவை உற்பத்தி செய்யாத; வாயு உற்பத்தியைக் குறைக்கின்ற அல்லது தடுக்கின்ற.

anaesthesia : உணர்ச்சி மயக்கம்; உணர்ச்சியிழப்பு; உணர்ச்சி யின்மை : உணர்ச்சி மயக்கம்; உறுப்பெல்லை உணர்வு நீக்கத்தின்போது வேதனையுணர்வு மூளையை எட்டாத வகையில் நரம்பு இயக்கம் நேரடியாகத் தடுக்கப்படுகிறது. முதுகந்தண்டில் ஒர் உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தினை ஊசிமூலம் செலுத்தி உணர்விழக்கச் செய்யப்படுகிறது. மயக்கமடைவதற்கு குளோரோபார்ம் போன்ற மயக்க மருந்துகளும் உடல் உறுப்பை உணர்விழக்கச் செய்ய போக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன.

amaesthesia, general : முழு உணர்விழப்பு; பொது ஊட்டு மயக்கம்.

amaesthesia, regional : பகுதி உணர்விழப்பு.

anaesthesia, local : தாவிட உணர்விழப்பு; உற்றிட உணர்விழப்பு.

anaesthesiology : உணர்நீக்கியல்; ஊட்டு மயக்கவியல் : உணர்வு நீக்கு மருந்துகள், அவற்றைச் செலுத்துதல், அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவியல்.

anaesthesiologist : மயக்க மருத்துவர் : மயக்க மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநர்.

anaesthetic : உணர்வு நீக்கி மருந்து (மயக்க மருந்து); உணர்வகற்றி; உணர்விழப்பி : 1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற. 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்