பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

urethrocystitis

1129

uricaemia


பெண்களின் சிறுநீர்ப்பையில் நழுவி பைபோல் உப்பல்.

urethrocystitis : சிறுநீர்த்தாரை சிறுநீர்ப்பையழற்சி : வழக்கமாக தொற்றின் காரணமாக ஏற்படும் சிறுநீர்த்தாரை மற்றும் சிறு நீர்ப்பையழற்சி.

urethrocystogram : சிறுநீர்த்தாரை சிறுநீர்ப்பைப்படம் : சிறு நீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரையின் கதிர்ப்படம்.

urethroperineal : சிறுநீர்த்தாரை மறைவிட : சிறுநீர்த்தாரை மற்றும் மறைவிடம் தொடர்பான.

urethropexy : சிறுநீர்த்தாரை பொருத்தல் : பெண்களில் ஏற்படும் இறுக்க நீரொழுகலை கட்டுப்படுத்த, சிறுநீர்த்தாரையை பூப்பிணைப்புடனும், வயிற்று நேர்த்தசைப் படலத்துடனும் பொருத்தும் அறுவை மருத்துவம்

urethroplasty : சிறுநீர் ஒழுக்குக்குழாய் ஒட்டு அறுவை : சிறுநீர் ஒழுக்குக்குழாயில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.

urethroprostatic : சிறுநீர்த்தாரை முன்னிலை சார்ந்த : சிறுநீர்த் தாரை மற்றும் முன்னிலைச் சுரப்பி தொடர்பான.

urethroscope : சிறுநீர்க்குழாய்; பார்வைக்கருவி; சிறுநீர் வடி குழாய் நோக்கி; சிறுநீர்த்தாரை உள்நோக்கி : சிறுநீர் ஒழுக்குக்குழாயின் உட்பகுதியைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி.

urethrostenosis : சிறுநீர்க்குழாய் அடைப்பு; சிறுநீர்க்குழாய் குறுக்கம் : சிறுநீர் ஒழுக்குக் குழாயில் நெரிசல் காரணமாக உண்டாகும் இறுக்கம்.

urethrotome : சிறுநீர்த்தாரை வெட்டி : சிறுநீர்த்தாரைக் குறுக்கத்தை அறுப்பதற்கான கருவி.

urethrotomy : சிறுநீர்க்குழாய் துளை அறுவை : சிறுநீர் ஒழுக்குக் குழாயில் துளையிடுவதற்காக அறுவை மருத்துவம் செய்தல். சிறுநீர் ஒழுக்குக்குழாய் அடைப்பை நீக்குவதற்காக இது செய்யப்படுகிறது.

urethrotrigonitis : சிறுநீர்ப்பை அழற்சி : சிறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கம்.

uric acid : யூரிக் அமிலம் (சிறுநீர் அமிலம்) : திசுக்களில் உட்கருப் புரதங்கள் சிதைவுறுவதால் உண்டாகும் ஒர் அமிலம். இது, வளர்சிதை மாற்றத்தின் ஒரு விளைபொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது. இது கரையாதது; இது அளவுக்கு அதிகமானால் கற்கள் உண்டாகும்.

uricaemia : யூரிக் அமில மிகைக்குருதி : இரத்தத்தில் யூரிக் அமிலம் மிகையாயிருத்தல்.