பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

urinoscopy

1131

Urografin


urinoscopy : சிறுநீர் ஆய்வு : சிறுநீர்த் தேர்வாய்வு.

urobilin : சிறுநீர் நிறமி : யூரோபி லினோஜன் ஆக்சிகரணமாவதால் உண்டாகும் பழுப்பு வண்ண நிறமி. இது மலத்தின் வழியாக வெளியேறுகிறது. சில சமயம், சிறுநீரிலும் காணப்படும்.

urobilinaemia : யூரோபிலின் மிகைக் குருதி : இரத்தத்தில் யூரோபிலின் காணப்படுதல்.

urobilinogen : யூரோபிலினோஜன் : குடலில் பாக்டீரியாவின் வினையினால் பிலிரூபினில் இருந்து உருவாகும் ஒரு நிறமி. இது இரத்தவோட்டத்தில் மீண்டும் ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மீண்டும் நுரையீரலில் பிலிருபினாக மாற்றப்பட்டு பித்தநீரில் அல்லது சிறுநீரில் வெளியேறுகிறது.

urobilinogenaemia : யூரோபிலினோஜன் கொண்ட குருதி : இரத் தத்தில் யூரோபிலினோஜன் காணப்படுதல்.

urobilinuria : மிகைச்சிறுநீர் யூரோபிலின் : சிறுநீரில் யூரோபிலின் அதிக அளவில் இருத்தல், இது, நுரையீரலில் பிலிரூபின் அதிகம் உற்பத்தியாகிறது என்பதற்குச் சான்று.

urochrome : யூரோக்குரோம் : சிறுநீருக்கு அதன் இயல்பான நிறத்தைக் கொடுக்கும் மஞ்சள் நிறமி.

urocoele : சிறுநீர்வீக்கம் : சிறுநீர் வெளிக்கசிவால் விரைவீக்கம்.

urocrisia : சிறுநீர்நோயறிதல் : சிறுநீரைப் பரிசோதித்து நோயறிதல்.

urocystitis : சிறுநீர்ப்பையழற்சி : சிறுநீர்ப்பையின் அழற்சி.

urodynia : சிறுநீர்கழிவலி : சிறு நீர் கழிக்கும்போது ஏற்படும் வலி.

urodynamics : சிறுநீர் இயக்கவியல் : சிறுநீர் உற்பத்தி, வடித்தல், தேக்கல் கழித்தல் போன்ற அனைத்து இயக்கங்களையும் பற்றிய ஆய்வியல்.

urogastrone : யூரோகேஸ்ட்ரோன் : சிறுநீரிலிருந்து பிரித்துப் பெறப்படும் ஒளிரும் நிறமியான, இரைப்பை அமிலச் சுரப்பை தடுக்கும் பாலிபெப்டைடு.

urogenital : சிறுநீர் பிறப்புறுப்பு சார்ந்த : சிறுநீர் மற்றும் பிறப்பு உறுப்புகள் தொடர்புடைய.

Urografin : யூரோகிராஃபின் : சிறுநீரக இடுப்புக்குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படுவதை ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் மூலம் பார்ப்பதற்கு உதவும் ஊடகப் பொருள்.