பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

URTI

1133

uterorectal


பயன்படும் அயோடாக்சில் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

URTI : மேல்மூச்சுக்குழல் நோய்.

urticarial : தடிப்புச் சொறி; காஞ்சொறித் தடிப்பு; தோலரிப்பு : காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒவ்வாமையினால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக இருக்கும், நமைச்சல் உண்டாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட்கள் இருந்துவிட்டு மறைந்துவிடும்.

Urtication : நமைச்சல் : காஞ்சொறிபோல் நமைச்சல் உண் டாதல்; கடுகடுப்பு.

Usher's syndrome : உஷெர் நோயியம் : பிரிட்டீஷ் கண் மருத்துவர் சார்லஸ் உவுெர் பெயர் கொண்ட, பிறவிக் கேளாமை, விழித்திரை நிறமி யழற்சி ஆகியவற்றை குணங்களாகக் கொண்ட மரபணுக் கோளாறு.

Usual Interstitial Prieumonia UlP : வழக்க இடைத்திசு நிமோனியா (யூ.ஐ.பீ) : நாராக்கப் பகுதியை மிகுதியும், இடைத்திசு மிகு வழற்சியும் காரணமாக வளி நுண்ணறையின் கட்டமைப்பு அழிந்து அதனால் மூச்சியக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும் நோய்.

uterectomy : கருப்பை நீக்கம் : கருப்பையை வயிறு வழியாக அல்லது யோனிப்புழை வழியாக நீக்குதல்.

uterotonic : கருப்பை இறுக்கி : கருப்பைத் தசையின் இறுக்கத்தை அதிகரித்தல்.

uterovaginal : கருப்பையோனி சார்ந்த : கருப்பை மற்றும் யோனி தொடர்பான.

uterine : கருப்பை சார்ந்த : கருப்பை தொடர்பான.

uteroabdominal : கருப்பை வயிறு சார்ந்த : கருப்பை மற்றும் வயிறு தொடர்பான.

uterocervical :கருப்பை கருப்பைக் கழுத்து சார்ந்த : கருப்பை மற்றும் கருப்பைக் கழுத்து தொடர்பான.

uterofixation : கருப்பைபொருத்தல் : கருப்பையை இடம்மாறிய பொருத்துதல் நிலை நிறுத்தல்.

uteroplacental : கருப்பை நச்சுக்கொடி சார்ந்த; கருவக நச்சுக் கொடி சார்ந்த : கருப்பை, நச்சுக் கொடி இரண்டும் தொடர்புடைய.

uterorectal : கருப்பை நேர்க்குடல் : கருப்பை மற்றும் நேர்க் குடலுடன் தொடர்புகொண்ட அல்லது தொடர்பான.