பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uterosal...

1134

uveitis


uterosalpingography : கருப்பை குழல்வரைவு : நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு கருப்பையையும் ஃபெல்லோப்பின் குழல்களையும் கதிர்ப்படமெடுத்தல்.

uterovesical : கருப்பை சிறுநீர்ப்பை சார்ந்த : கருப்பை, சிறுநீர்ப்பை தொடர்பான.

utrine inertia : கருப்பை மந்தம்.

uterorectal : கருப்பை-மலக்குடல் சார்ந்த : கருப்பை, மலக்குடல் இரண்டும் தொடர்புடைய.

uterosacral : கருப்பை-பிட்ட எலும்பு சார்ந்த : (புனித எலும்பு) இரண்டும் தொடர்புடைய.

uterosalpingography : கருக்குழாய் ஊடுகதிர்ச் சோதனை; கருவக-அண்டக்குழல் வரைவியல் : கருப்பை, கருக்குழாய்கள் ஆகியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் பரிசோதனை செய்தல். கருவெளியேறும் குழாய்களின் காப்புத்திறனை அறிய இச்சோதனை செய்யப்படுகிறது.

uterovaginal : கருப்பை-யோனிக் குழாய் சார்ந்த; அல்குல்-கருப்பையின் :கருப்பை, யோனிக் குழாய் இரண்டும் தொடர்புடைய.

uterovesical : கருப்பை-சிறுநீர்ப்பை சார்ந்த : கருப்பை, சிறுநீர்ப்பை இரண்டும் தொடர்புடைய.

uterus : கருப்பை; கருவகம் : பெண்ணிடம் குழந்தை உருவாகும் உறுப்பு. இது உட்குழிவான தசை உறுப்பு. இதனுள், கரு வெளியேறும் குழாய்களின் வழியாக சூல் முட்டை வந்து சேர்கிறது. இங்கு இந்தச் சூல் முட்டை குழந்தையாக வளர்ச்சி பெற்று யோனிக் குழாய் வழியாக வெளியேறுகிறது.

uteritis : கருப்பை அழற்சி.

UTI : சிறுநீர்க்குழாய் நோய்.

utricle : உயிர்ம அணு; பெரும்பை : உட்காது, காதின் உட்புறச் சிறுகட் குழி, உயிர்ம அணு; உடலின் நுண் சிறு கண்ணறை.

uveitis : கண் வண்ணப் பகுதி அழற்சி; கருவிழிப் படல அழற்சி :