பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



V


V : வீ : நுரையீரல் மூச்சியக்கத் துக்கான குறியீடு.

vaccination : அம்மை குத்துதல் : அம்மை நோயைத் தடுப்பதற்காக அம்மைப்பால் குத்துதல்.

vaccinator : அம்மை மருத்துவர்.

vaccine : அம்மைப்பால் (பிணிப்பால்) : பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், இந்தக் காப்புச் சீநீர் பசுவிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதருக்கு வரும் அம்மை நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. 2 ஒரு நோயின் இறந்துபோன அல்லது வலுவிழந்த போன பாக்டீரியாவில் அடங்கியுள்ள திரவம் இது, அதே நோய்க்கு எதிரான பொருள்களை உடலில் உற்பத்தி செய்வதற்கு ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

vaccinia : அம்மை நோய் எதிர்ப்புக்கிருமி : மாட்டம்மை நோய் அம்மை நோய்க்கு எதிராகத் தடைக் காப்பளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிருமி. பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய்.

vacuole : நுண்குழிவறை : ஒரு உயிரணுவின் (உட்கூழ்மம்) முன்கணியத்துக்குள் உருவாகி உள்ள சிறுகுழிவறை.

vacuum extractor : வெற்றிட இழு சக்திவழி குழந்தையை வெளியேற்றல் கருவை வெளியேற்றல், கருவதத்திலிருந்து குழந்தை பிறக்கும் கருச் சிதைவுக்குப் பயன்படும் கருவி.

Vagabond's disease : வேகபாண்டு நோய் : கீழ்நிலைச் சேர்ந்த பொருளாதாரக் குழுக்களைச் சேர்ந்த கவனிப்பாரற்ற இளைஞர்கள் விடலைப் பருவத்தினர் மற்றும் பிச்சைக்காரர்களில் காணப்படும் ஒருவகை பேன்நோய் (பெடிகுலோசிஸ் கார்போரிஸ்).

vagina : யோனிக் குழாய்; புணர் புழை : பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், பிறக்கும் குழந்தை இதன் வழியே வெளிவருகிறது.

vaginalitis : உறையழற்சி : விரைபொதி உறையின் அழற்சி.

vaginismus : யோனிக்குழாய் சுவர் இசிப்பு; யோனி இசிவு : யோனிக் குழாய்ச் சுவர்களில் ஏற்படும் வலியுடன்கூடிய தசைச்