பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

varicose

1140

vasectomy


varicose : விரிசுருள் : இயல்புக்கு மாறாக நிரந்தரமாக விரிந்து உள்ள ஒரு சிரை.

varicose veins : நாள அழற்சிச் சிரைகள்; சுருள் சிரைகள் : நாள அழற்சிக்கு ஆட்பட்ட சிரைகள், இதன் தடுக்கிதழ்கள், நேர் எதிராகப் பாயும் வகையில் வலுவிழந்து விடுகின்றன. பெரும்பாலும் கீழ் உறுப்புகளில் இது ஏற்படுகிறது.

varidase : உறை குருதி அலம்பு மருந்து : ஸ்டிரெப்டோக்கினேஸ், ஸ்டிரெப்டோடார்னேஸ் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவை மருந்தின் வணிகப் பெயர்.

variola : பெரியம்மை : சிறிய அளவிலான அல்லது மிதமான அளவிலான பெரியம்மை. (சின்னம்மை நோய்வகை).

varix : நரம்புக் காழ்ப்பு : நரம்புப் புடைப்பால் ஏற்படும் கோளாறு.

varus : உள்வளைந்த : வெளிக்குவிந்து வளைந்த.

varus, vara varum : 1. முகப்பரு; 2. நுடங்கு முடம்; உள் வரைவு : கைகால் முனை உள்வளைவுக் கோளாறு.

vas : குழாய் நாளம்); குழல்.

vascular : குருதிநாளம் சார்ந்த; நாள வட்டம்; குழல் மய : குருதி நாளங்கள் உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர்பானவை.

vascularization : செல்குழாய் நாளமாக்கம்; நாள ஊட்டம்; குழல் மயமாக்கம் : இரத்தவோட்டம் உண்டாக்குதல். செல்குழாய் நாளஞ் சார்ந்ததாக்குதல்.

vasculature : நாள அமைப்பு : உடலின் நாள வலைப் பின்ன லமைப்பு.

vasculitis : குருதி நாள அழற்சி; நாள அழற்சி : இரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம்.

vasculo toxic : குருதிநாள நச்சு : இரத்த நாளங்களில் தீங்கான மாறுதல்களை உண்டாக்கும் பொருள்.

vas deferens : வெளியேறு (விந்தணுக்)குழல் : 47 செ.மீ நீள விரைகளிலிருந்து விந்தணுக்களை ஏந்தி வெளியேற்று நாளத்திற்கு கொண்டு செல்லும் ஒடுங்கிய நீளமான இணைக் குழல்களில் ஒன்று. வெளியேற்று நாளத்திலிருந்து விந்தணுக்கள் சிறுநீர்த்தாரையின் முதல் பகுதிக்குள் கொட்டப் படுகின்றன.

vasectomy : விதை நாள அறுவை; விந்துக்குழாய் நீக்கம் : விதைக் கொட்டையை வெளியேற்ற நாளத்தையோ, அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல்.