பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vasoactive

1141

vasovasostomy


vasoactive : நாளஇயக்க : இரத்த நாளங்களின் உள்ளிடத்தை மாற்றியமைக்கும்.

vasoconstriction : நாளக் குறுக்கம் : இரத்தக்குழாய்களின் உள்ளிடம் சுருங்குதல்.

vasoconstrictor : குருதி நாள இறுக்க மருந்து; நாளச் சுருக்கம்; குழல் சுருக்கி : குருதி நாளங்களை இறுக்குகிற மருந்து.

vasodepressor : இரத்த அழுத்தக் குறைப்பி : புறப்பகுதித் தடையைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறையச் செய்யும் பொருள்.

vasodilator : குருதி நாள விரிவகற்சி மருந்து; குழாய் விரிப்பி; குல் விரிப்பி : குருதி நாளங்களை விரிவகற்சி செய்கிற மருந்து.

vasodilatation : நாளவிரிவு : இரத்தக்குழாய்களின் உள்ளளவை அதிகரித்தல்.

vasography : நாளவரைவு : ஊசிமூலம் நிற ஊடகத்தை வெளியேறு (விந்தணுக்)குழல் அல்லது இரத்த நாளத்துக்குள் செலுத்தி எக்ஸ் கதிர்ப்பட மெடுத்தல்.

vasomotor : நாளஇயக்க : இரத்தக்குழாய்களின் விட்டத்தை ஒழுங்குபடுத்தும் பொருள்.

vasomotor nerves : குருதிநாள இறுக்கத்தளர்வு நரம்பு; குழலியக்க நரம்புகள் : குருதிநாள இறுக்கத்தைத் தளர்த்து நரம்புகள்; நரம்புச் செறிவுத் தளர்த்து நரம்புகள்.

vaso-occlusive crisis : நாள அடைப்புச் சிக்கல்; தீவிரநோய் : வாளணுச்சோகை நோயில், வாளுகு சிவப்பணுக்கள் மற்றும் குருதிக் குறையால் அடைபடும் சிறு இரத்தக் குழாய்கள்.

vasopression : நாள அழுத்தி இயநீர் : இரத்த நாளச் சுவர் தசையைச் சுருங்க செய்யும் இயக்குநீர் (ஹார்மோன்) மருந்து.

vasopressor : நாள அழுத்தி : தமனிகள் மற்றும் தந்துகிகளின் தசைத்திசுவை சுருங்கச் செய்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் பொருள்.

vasospasm : நாளச்சுவர் இசிப்பு; குழல் இசிவு : இரத்த நாளச் சுவர்களைச் சுருங்கச் செய்கிற இசிப்பு.

vasovagal : நாள அலைவு நரம்பு : இரத்தக்குழாய்களின் மேல் அலைவு நரம்பின் செயல் தொடர்பான.

vasovasostomy : விந்தணுக் குழலிணைப்பு : வெளியேறு (விந்தணுக்)குழல் வெட்டப்பட்ட.